கதையாசிரியர் தொகுப்பு: மடிப்பாக்கம் ரவி

3 கதைகள் கிடைத்துள்ளன.

“ஆரிய” முத்து

 

  ஒரு இண்டு இடுக்கு கூட விடாமல் வெயில் பிரம்மாண்டமாய் எங்கும் பரவி வழிந்துக் கொண்டிருந்தது. சல் என்று ஒரு ரீங்காரம் வேறு இருந்தது கூடவே. ஆனால் முத்துவுக்கு அந்த வெயில் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை. “உஸ்..உஸ்..”என்று பெருமூச்சு விட்டபடியே வேலையில் ஆழ்ந்திருந்தான் அவன். முகத்தில் வழியும் வேர்வையை கூட துடைத்துக் கொள்ள முடியாமல் கைவேலை அவனுக்கு. கையை எடுத்துக் கண்களிலோ கன்னத்திலோ வைத்தால் களிமண் அப்பிக் கொண்டு விடும். எதையும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் ஆழ்ந்திருந்தான்


மீண்டும் மரிப்பாய் நீ!

 

  மேலிருந்து தொங்கும் ஒரு கறுப்பு நிறப் பட்டுச் சேலையைப் போல இருள் மெல்லிய காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. தூரத்தே நின்றுக் கொண்டிருக்கும் கப்பல்களிருந்து மினுக்கிக் கொண்டிருந்த விளக்குகளைத் தவிர அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் வேறு வெளிச்சம் இல்லை. மெல்ல நடந்துக் கொண்டிருந்த நிலவையும் மேகங்கள் மூடத் தொடங்கியிருந்தன. வெவ்வேறு திசைகளிருந்து வந்து சேர்ந்த கறுப்பு மேகங்கள் தங்களின் கனத்த வயிறுகளுடன், ஒருவித மிரட்டலுடன், அதிகாரத்துடனும் கூட திரிந்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது மின்னல் பாம்புகள் நெளிந்து நெளிந்து


மா…அம்…..மா!

 

  கல்பனாவிற்கு அவளுடையத் தோட்டத்தின் மீது மிகுந்த ஆசையும் ஆர்வமும் உண்டு. அந்த சிறிய தோட்டத்தில் எல்லாமே அவள் கையால் நட்டு வளர்த்த செடிகள்தான். வீட்டின் முன் புறத்தில் ஒரு பாத்தி நிறைய வெண்டை: ஒரு பாத்தி நிறைய தக்காளி. மறு புறத்திலே ஒன்றில் கத்திரிக் காய் செடிகள்; மற்றொன்றில் மிளகாய். எதிர்புறத்தில் சற்றே இடைவெளி விட்டு நான்கு காலி•ளவர் கொடிகள். ஒரு ஓரமாக கறிவேப்பிலைக் கன்று ஒன்றே ஒன்று மட்டும்! அள்ளித் தெளித்த வகையிலே மசமசவென்று