கதையாசிரியர் தொகுப்பு: மகேஷ்வரன்

1 கதை கிடைத்துள்ளன.

மா மரம்

 

 பேச்சியூரின் அடையாளமே அந்த மரம்தான். மாமரம். மிகப்பெரிய மரம். ராசாக்கள் காலத்தில் முத்தாயி கிழவியின் முன்னோர்கள் வைத்த மரம். அப்படியொரு மாமரத்தை வேறெங்கும் பார்க்கவே முடியாது. நான்குபேர் கையைக் கோர்த்துக்கொண்டு அணைத்தால் மட்டுமே அடங்கக்கூடிய அளவிற்கு பருமனான அடிப்பகுதி. ஆலமரம் போல அடர்ந்து படர்ந்த கிளைகள். கொத்துக் கொத்தாக பச்சைப்பசேலென்ற இலைகள். ஒருபக்க கிளைகள் பூத்திருக்கும். இன்னொரு பக்க கிளைகளில் முற்றிய காய்கள் குலுங்கும். வேறொரு பக்கம் பிஞ்சுகள் சிதறும். கிளைக்குக் கிளை சுவையும் வேறுபாடு. ஒருவேளை