கதையாசிரியர் தொகுப்பு: ப.ஆப்டீன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

குட்டிம்மா

 

 ஆமித் – அன்று வழக்கம் போல் இஷாத் தொழுகை முடிந்ததும் மீண்டும் வந்து அன்றைய ஆங்கிலப் பத்திரிகையில் மூழ்கினார். அலுப்புத் தட்டியது. டீ.வி.யில் உலக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். இரவு பத்து முப்பது. குட்டிம்மா கிளாசில் பால் கொண்டு வந்து நீட்டினாள். பாலை அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்ல ஆயத்தமானார். வெளிவாசல் கேட்டில் சில் சில்லென்று தட்டும் ஓசை பயங்கரமாக இருந்தது. அந்தச் சத்தத்திலே ஒரு வித்தியாசமான முரட்டுத் தன்மையும் தெரிந்தது. இந்த அகால நேரத்தில் இது யார்?


மண்ணின் செல்வங்கள்

 

 கந்தோரில் தன்னையும் அழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி ஒரு சாதாரன விவசாயி, அப்துல் ஜப்பாரின் செவி களில் நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். கனவா? கனவா? கண்களைக் கசக்கிவிட்டுப் பரீட்சித் துப் பார்த்தார்: ஒரு பொல்லா அசட்டுச் சிரிப்பைச் சிரித்தார். ஒரேயொரு கணம்தான். மகிழ்ச்சி, துன்பம், ஏக்கம், விருப்பு, வெறுப்பு அத்த னையும் கலந்து இழையோடியது. மறுகணம் அதை ஆட் கொள்வது போல் ‘கர் முர்’ என்று ஆரவாரித்துப் படை யெடுத்தது ஓர் இருமல் படலம்.


முரண்பாடுகள்…

 

 கிராமத்திற்கு நிறைகுடம் போல், அமைதியாக ஆனால் மிகத் தெளிவாக வரட்சிகளைக் கண்டு வற்றிப் போகாத அந்தப் பெரிய குளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருக்கிறான். நேற்று நடந்து முடிந்த சம்பவம் அவன் நெஞ்சைப் பிளந்து தலைகுனியச் செய்து விட்டது. கடந்த காலங்களில் இப்படி எத்தனையோ தலைகுனிவுகளை எதிர்நோக்க வேண்டி யிருந்தாலும் படித்த கூட்டத்திலிருந்து அவன் இதைச் சற் றும் எதிர் பார்க்கவில்லை. கல்விமான்களுக்கு முன்னால் தலை நிமிர்ந்து நிற்கலாம்: அவர்களும் தலைநிமிர்ந்து நோக்கு வார்கள் என்று தான்


நீந்தத் துடிக்கும் மீன் குஞ்சுகள்

 

 “சாச்சி, ம்மா எப்ப வருவாங்க..இண்டக்கி நானும் ஸ்கூலுக்குப் போகவா?” எத்தனையோ நாட்களாக மனதில் ஊறப்போட்டு வைத்திருந்த அந்த மகத்தான கேள்வியை, ஒருவகை துணிச் சலோடு கேட்டு விட்டாள் பர்ஹானா. ஆனால் அது நஜிமா சாச்சியின் நெஞ்சைத் துளைத்து கோபத்தை மூட்டிவிடும் என்று அந்தப் பிஞ்சு மனம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலாம் வகுப்புப் படிக்கும் தனது மகள் பைரோஸ் சீருடையணிந்து தயாராக நிற்கிறாள். சின்ன மகள் சக்லா வுக்கு காலை உணவு ஊட்டி, வெளுத்த வெள்ளைக் கவுன், கழுத்துப்பட்டி


புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட்

 

  “போய்த்தான் ஆகணும், ஆபிஸ்ல சொல்லிட்டாக … நாளைக்கு காலையிலேயே காம்பராவைப் பூட்டி, சாவிய தலைவர்கிட்டே ஒப்படைச்சிடனும், பெரிய தொரெ கிளாக் கர் ஐயா மூலமா தெரிவிச்சுட்டாரு…” “போகல்லேனா இவங்க என்ன செஞ்சிப்புடுவாங்களாம். வேணும்னு ‘பை போஸா’ லயக் காம்பராவ எடுத்துக்குவாங்க … எடு.” சிந்தனை வயப்பட்ட சின்னையா, தோட்ட அலுவலகத் திலிருந்து குறுக்குப் பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தான். “அதுக்கு முந்தி இன்னக்கே தோட்டக்கத்தி, மம்பெட்டி சாமான் இருந்தா, ஆயுதக்காரர்கிட்டே குடுத்துடு” “அப்புறம் எனக்கு என்னத்துக்கு


இரவின் ராகங்கள்

 

 இரைச்சல்கள் ஓய்ந்ததும் இருள் கவிந்தது. மருதானையின் பிரதான வீதி ஒன்று மாளிகாவத்தை மையவாடியைப் போல் அமைதியில் ஆழ்ந்துபோன அந்த வேளையில், யாருமே அக்கறைப்படாத ‘ஓர் உலகம்’ விழித் துக் கொண்டது. ‘விபத்து’க்களில் தம் சுகத்தை இழக்தபின் அவர்களுக்கு எல்லாமே…. இரவுகள்தான். வாழ்க்கை இனிக் குருடு. வாழ்க்கை இனி ஊனம். வாழ்க்கை இனி…? இப்படி எத்தனையோ. அன்றும் பின்னிரவு நடமாட்டம் உச்சத்தை அடைந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் நவாஸும் வந்திருந்தார். அவனுக்கு இயற்கையிலேயே கலை நெஞ்சு : நல்ல


‘ரபீயுல் அவ்வல்’ தலைப்பிறை

 

 மஃறிப் தொழுகை முடிந்ததிலிருந்தே, பள்ளிவாச லில் இருந்து சிதறிய கூட்டம் பலவாறாகப் பிரிந்து சென் றனர். நடுத்தர வயதினர் சிலரும், வேண்டியவர்களும் தான் ஹாஜியார் வீட்டுப் பக்கம் விரைந்தனர். அப்துல் காதர் லெவ்வை, மெல்ல மெல்லமாக ஊன்று கோலின் துணையுடன் தமது இல்லம் நோக்கி நடந்து கொண்டிருந்தார். உடல் நலமில்லா விட்டாலும் ‘ஜமாத் தொழுகை’யை அவர் விடமாட்டார். இளைஞர் சிலரும் அவருக்கு உதவியாக சென்று கொண்டிருந்தனர். மஃறிப் தொழுகைக்குப் பின் யூசுப் ஹாஜியார் வீட்டுக் கந்தூரி வைபவம்,


ஒரு கிராமத்தின் புதுக் கதிர்கள்

 

 “வாப்போ…வ்” “வாப்போ…வ்” தூரத்தேயிருந்த சிறார்களின் பிஞ்சுக் குரல்கள் பின்னிப் பிணைந்து, எதிரே மலை போன்ற கற்பாறையில் மோதி எதிரொலித்தபோது புல் வெளியெனக் காட்சிதந்த புதுக் கதிர்களுக்கு அவன் உரமூட்டிக் கொண்டிருந்தான். “கிடைக்கிறதே கொஞ்ச நஞ்ச றீர். அதிலதானே கதிர்கள் உயிர் வாழனும். ஒரு துளி நீரையேனும் விரய மாக்கினா என்ன ஆகும்?” போன வருடம் மண் கவ்வின ஞாபகம் உறுத்தியது. முந்தின வருடம் மட்டும் என்னத்த அள்ளிக் கட்டியது. அதுக்கு முந்தியும்… “ஒரு பக்கம் இப்பிடி. மறுபக்கத்தால


பந்தல் கட்டும் செக்கு மாடுகள்

 

 வெள்ளாமை வெட்டி சூடு அடித்த கையில் இரண்டு காசு. புழங்கியதும் அவர்களுக்கு உசார்தான். ஊர் மரைக்கார், கச்சி முஹம்மது, காசிம் முதலாளி, பள்ளி மௌலவி, பள்ளிவாசல் கமிட்டி மற்றும் ஊருக்குப் பெரியவர்களான அபூபக்கர், ஓமர் விதானை இப்படிப்பலர் – அஹ்மது லெவ்வை அவர்களது அழைப்பை ஏற்று அவரது வளவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஹ்மது லெவ்வை, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ கூறி இன்முகத்துடன் வரவேற்கிறார். பென்னாம் பெரிய கல்வீட்டின் முன் கூடத்தில் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கின்றன.


அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

 

 மணி அடித்தது. பாடசாலையின் திறந்தவெளி மண்ட பத்தில் தடதடவென்று பிள்ளைகள் காலைக் கூட்டத்திற்கு விரைந்தனர். கிறா அத்’ ஓதி காலைக் கீதம் பாடியபின் ஆசிரிய அறிவுரையும் முடிந்தது. மாணவ மாணவிகள் மீண் டும் வகுப்புகளுக்குச் சென்றனர். எங்கள் கண்கள் அவர்களைத் தேடுகின்றன. ஷாலியா, காசிம், பீலி இப்படி… அவர்கள் எங்கே? இன்று எங்களுக்கு பெரிய ஏமாற்றம். ஆராய்ந்ததில் சில பிள்ளைகள் சொன்னார்கள் — “லத்திபா சம்மளங்குளத்துக்கு அவகட. காக்காட கல்யாணத்துக்கு போய்ட்டா. “ரஹீமா அக்காவோட முழுகப் போனா”