கதையாசிரியர் தொகுப்பு: பொள்ளாச்சி அபி

12 கதைகள் கிடைத்துள்ளன.

புயலின் மறுபக்கம்.!

 

  பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம். மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள். மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.., வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்.., ‘நகரத்தின் இயக்கத்திற்கும்,தொழிலுக்கும் முதுகெலும்பாய் நேற்றுவரை இருந்தது


நீரில் ஒரு தாமரை

 

  கண்ணாடியில் இன்னொரு முறை தன் முகம் பார்த்துக் கொண்டாள் செண்பகம். ‘முகத்தில் பவுடர் அதிகமோ..?’ இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து அழுத்தாமல் துடைத்துக்கொண்டு கண்ணாடியில் ஒட்டிவைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டையும் நெற்றியின் நடுவில் வைத்தபடி நிமிர்ந்தபோது,வெளியே கமலாவின் குரல் கேட்டது. “ஏய்..செம்பா..ரெடியா..? மணி ஒம்பது ஆயிருச்சுடி சீக்கிரம்..,” “ஆனா என்னடி..? நாம என்ன ஆபீஸ்க்கா போறோம்.., கரெக்ட் டயத்துக்கு போறதுக்கு..?” கேட்ட செண்பகத்திற்கு இருபத்திரெண்டு வயது.வாளிப்பான உடல்கட்டும்,எப்போதும் புன்னகை இழையோடும் பிரகாசமான முகமுமாய், பார்த்தவர்கள் யாரும் பதினெட்டு