கதையாசிரியர் தொகுப்பு: பொள்ளாச்சி அபி

12 கதைகள் கிடைத்துள்ளன.

பிறந்த நாள் ..!

 

  நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..! கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும்


சபலம்.!

 

  காலிங்பெல் அழுத்தப்பட்ட சப்தம் கேட்டு கதவைத் திறந்த,சபேசன்.தங்கள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ராமகிருஷ்ணன் நிற்பதைக் கண்டு குழப்பமானான். முகத்தில் கேள்விக்குறியுடன், இன்றைக்கு என்ன.? என்பதுபோலப் பார்த்தான். தனது கையில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளைக் காண்பித்த ராமகிருஷ்ணன், “சார்,காத்துலே பறந்து கீழே விழுந்தது.யாருதுன்னு தெரியல்லே.அதான் உங்களைக் கேட்டுட்டு,மேல் வீட்டுக்குபோலாம்னு வந்தேன்..” அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது,செல்போன் ஒலித்தது.அதை எடுத்துப் பேசும்போது,மேல் சட்டைப் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்திருக்குமோ..?. அவன் தனது சட்டைப்பாக்கெட்டை சோதித்துக் கொண்டான். பத்துரூபாயாக சில தாள்களும்,சில்லறை


அவரது சொந்தங்கள்..!

 

  சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம்.., “இதோ அழுதுவிடுவேன்..” என்பதைப்போல,வானம் தன் முகம் கறுத்து நின்றிருந்தது. அதனை உறுதிப் படுத்துவது போல,மேற்குத்திசையிலிருந்து ஈரத்தை சுமந்து வந்துகொண்டிருந்தது காற்று. பிரதான சாலையைவிட்டு சற்றே உள்ளொடுங்கி, வாசலில் மயங்கும் வெளிச்சத்துடன் நின்றிருந்த அந்தப் பெரிய வீட்டுக்கு முன்பாக,பல வண்ணங்களில் பூத்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள்,இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன. இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர் களும் கைவிட்ட நிலையில் தனது மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும்


நீயே சொல்லு சார்..!

 

  நேத்து சாயங்காலம்,நான் ரெண்டுபேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும் சார்..,அதுவும் எனக்குத் தெரிஞ்ச வழியிலே ரொம்பக் கொடூரமாத்தான் கொன்னேன்னு உங்கிட்டே சொல்றதுலே எனக்கொண்னும் சங்கடமில்லே சார்.., இன்னைக்கு காலையிலே, நீ கூட பேப்பரிலே பாத்திருப்பே.., ஆனா..நான் அவங்களைக் கொன்னது சரியா, தப்பா..ன்னு நீதான் ஒரு நியாயத்தைச் சொல்லணும் சார்..! கண்டிப்பா சொல்லுவியா சார்..? இந்த மருதாச்சலம் பயலுக்கு அடியாளா இருந்த ரெண்டுபேரைத்தான் நான் கொன்னுட்டேன்.இப்ப அதுக்கு பதிலா என்னைப் புடிச்சு பழிவாங்குறதுக்காக, ஆளும்,படையும் போட்டு


இதுதான் விதியா..?

 

  யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை..நான் எப்படியோ இந்த ஊருக்கு வந்து,அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் வசிக்கத் துவங்கி,யாரும் எவ்விதக் கேள்வியும் எழுப்பாததால் இங்கேயே நிலை கொண்டு விட்டேன். நான் இங்கே வந்த புதிதில்,சாலையின் இருபுறங்களிலும் உள்ள தோப்புகளும், தோட்டங்களும், விலைநிலங்களாக மாறி,வீட்டுமனைகளாக வேகமாக மாறிக் கொண்டு இருந்தது.பலர் நிலம் வாங்கிய கையோடு வீடுகளையும் கட்டத்துவங்கியிருந்தனர்.முப்பது ஆண்டுக் காலமும் ஓடிவிட்டது.வாய்பேச முடியாத நான் இங்கே வந்தபோது அனாதையாகத்தான் உணர்ந்தேன்.., ஆனால்,நாளடைவில் எனது ஆதரவைத் தேடி மற்றவர்கள் வந்தபோது எனக்குப்