கதையாசிரியர் தொகுப்பு: பொள்ளாச்சி அபி

12 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

 

 ”ஏய் சரசு… மின்னல் வெட்டுது பாரு. மழை வரும்போல இருக்கு. கொடியில காயப்போட்ட துணியெல்லாம் எடு!” – சிவகாமி இரைந்தாள். அதிர்ந்து நிமிர்ந்த சரசு அத்தை, கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, ”தள்ளுங்க… தள்ளுங்க… கொஞ்சம் இருங்க வர்றேன்…” என்றபடி அவசரமாகக் கைகளால் விலக்கிவிட்டு எழுந்து ஓடினாள். சரசு அத்தைக்கு ஏறக்குறைய 35 வயது இருக்கும். வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருப்பதால், உருவிவிட்டாற்போல கிண்ணென இருந்தாள். படக்கென உட்கார்வதும், நிமிர்வதும்… அப்படியே அம்மாவுக்கு


எங்கேயும் எப்போதும்!

 

 2015.பிப்ரவரி.04 நியூயார்க் நகரம் தனது மாலைநேரத்தைக் கடந்து,மெதுவாக மயங்கிக் கொண்டிருந்த இரவு எட்டு மணி. நகரின் மத்தியில், செயின்ட் ஜேம்ஸ் தேவாலயத்தின் பராமரிப்பிலிருந்த பூங்காவின் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்த சாரா,தனது காதலன் இராபர்ட்டை கடுமையாகக் கோபித்துக் கொண்டு,கடந்த பத்து நிமிடங்களாக வார்த்தைகளால் வெடித்துக் கொண்டிருக்கிறாள். “சாரா..ப்ளீஸ் நம்பு..வரும் வழியில் எனது காருக்கு ஏதோ கோளாறு.மெக்கானிக்கை அழைத்துச் சென்று சரி செய்து எடுத்துவர ஒருமணிநேரம் தாமதமாகிவிட்டது என்பதுதான் உண்மை.மற்றபடி உன்னிடம் சொன்ன நேரத்திற்கு வரக்கூடாது என்றெல்லாம் இல்லை..இதனால்தான்


சுத்தம்

 

 ஆஸ்துமா நோய் முற்றிப்போனதில்,பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த மாமியார் செத்துப் போனதற்காக,பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் பார்த்தசாரதி, காரியமெல்லாம் முடித்து விட்டு,இன்றைக்குத்தான் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு முன்பே வந்திருந்த அலுவலகப் பணியாளர்கள் எழுந்து நின்று,‘குட்மார்னிங்..’ சொல்லிக் கொண்டிருக்க,ஆமோதிப்பாய் தலையசைத்தபடியே,தனது அறைக்குள் நுழைந்தார்.இருக்கையில் அமர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள்,சீனியர் கிளார்க் கிருஷ்ணமூர்த்தி அறையின் வாசலில் வந்து நிற்க,நிமிர்ந்து பார்த்தார். “யெஸ் கமின்..” கையில் சில காகிதக் கற்றைகளுடன் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி,“சார்..ரெண்டுநாளைக்கு முன்னாடி,ரீஜனல் ஆபிசிலிருந்து வந்த


அத்தையின் கதைகள்..!

 

 “ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது..கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான். ‘விலுக்’கென்று,அதிர்ந்து நிமிர்ந்த சரசு,கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, “தள்ளுங்க..தள்ளுங்க..கொஞ்சம் வழி விடுங்க..” என்றபடி,அவசரமாய் கைகளால் விலக்கிவிட்டு,சிறு பெண்போல எழுந்தோடினாள். சரசு அத்தை எங்கள் வீட்டிற்கு வந்தபிறகு,அந்த ஊரிலேயே,எங்கள் வீட்டில் மட்டுமே இருந்த ரேடியோப் பெட்டி மீது எனக்கிருந்த கவர்ச்சி குறைந்துபோனது. காரணம்,அத்தை சொல்லும் கதைகளைப் போல,ரேடியோவில் வரும் நிகழ்ச்சிகளோ,பாட்டுகளோ எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வப்போது அம்மா


தல புராணம்..!

 

 மே மாதத்தின் உக்கிரமான வெயில்,காலை பதினொரு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருந்தது.அனல் பறந்து கொண்டிருந்த சாலையில்,எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து வருவதுபோல நெளிசல்களுடன் வந்து, தம்மைக் கடப்பதை வேடிக்கை பார்த்தபடி,குளிரூட்டப்பட்ட காரின் முன் இருக்கையில், பவித்ராவும்,சீனுவும் அமர்ந்து கொண்டிருந்தனர். “அப்பா..பொள்ளாச்சிக்கு இன்னும் 12 கி.மீ..ன்னு போட்டிருக்கு..,அங்க போய் எனக்கு கூல்டிரிங்ஸ் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கே..ஞாபகம் வெச்சுக்கோ..!” காரினை ஓட்டிக் கொண்டிருந்த வேல்முருகனை, சீனுவின் குரல் உசுப்பியது. பின்பாட்டு போல.. “எனக்கும் வேணும்..” மகள் பவித்ராவின் குரல். சாலையிலிருந்து