கதையாசிரியர் தொகுப்பு: பொன் குலேந்திரன்

68 கதைகள் கிடைத்துள்ளன.

கிறனி (Granny) கண்மணி

 

 பாட்டிமார்கள் அனேகமாக பழமையில் ஊறினவர்கள். என் அம்மாவின் தாய் கண்மணியை சுருக்கி “கிறனி கண்மணி” என்றே ஊரில் பலர் அழைப்பார்கள். கிறனி (Granny) என்ற ஆங்கில வார்த்தை பாட்டியைக் குறிக்கும் அவளுக்கும் அது பிடிக்கும். நான் ஆரம்பத்தில் கொழும்பில் அவள் இருக்கும் பொது கண்மணி பாட்டியை அம்மம்மா என்று சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை “ எடேய் சுந்தரம் அப்படி என்னைக் கூப்பிடாதே இங்கை கொழும்பிலை கிறனி என்று தான் எல்லோரும் என்னை கூப்புடுவினம். ஊரோடு நீ ஒத்து


சேருவில சிறுத்தைகள்

 

 இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை கவனிக்க வன இலாக்கா உண்டு. அவ் வனங்களில் உள்ள வனவிலங்கள் தாவரங்கள். நதிகள் . குன்றுகள் . குளங்கள் நாட்டின் கனிவளங்களாகும் . அதை அழிப்பது பெரும் குற்றம் அதோடு அழிவினால் சூலழும் பாதிப்படைகிறது . திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு உள்ள சேருவில கிராமத்தில் “அல்லை” வனம் உள்ளது . கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் “சேரு”


“சுமி” ஒரு தொட்டாச்சிணுங்கி

 

 அன்று திங்கட்கிழமை காலை ஏழு மணி. நான் வேலை செய்யும் வங்கியில் மோகனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து இரு மாதங்களாகி விட்டன. நேரத்துக்கு ஆபிசுக்கு போக வேண்டும் , அப்போது தான் தனக்கு ரிபோர்ட் செய்யும் இருபது பேருக்கு தான் ஒரு வழிகாட்டியாக இருக்கமுடியும் . ஆபீசுக்குப் புறப்பட்டு, அவசரம் அவசரமாக காலை உணவையும் காப்பியையும் சாப்பிட்டு விட்டு கார் சாவியுடனும், கையில் குறும் பெட்டியுடனும் வீட்டில் உள்ள கராஜுக்கு தன் மாமனார் வாங்கிக் கொடுத்த


பார்வதி பெரியம்மா

 

 என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி. அதற்கு அடுத்தது முறையே என் சின்னம்மாக்கள் துர்காவும் பைரவியும் . என் தாத்தா சிவலிங்கம் தன் குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று ஏங்கியவருக்கு கொடுத்து வைக்கவில்லை . ஐந்தாவதாக எனக்கு ஒரு மாமன் பிறந்து ஒரு வருடம் கூட வாழவில்லை. அது என் தாத்தா குடும்பத்தை வெகுவாக பாதித்தது அது மட்டுமல்ல அதன்


ஆத்மனின் ஆன்மா

 

 அன்று பகல் பெய்யத் தொடங்கிய மழை விட்டப்பாடக இல்லை. மருத்துவமனையில் தனியார் அறையில்உள்ள ஜன்னல கண்ணாடியில் இருந்த மூடுபனியை நான் என் கைகுட்டையால் துடைத்து வெளியே பார்த்தேன். இலையுதிர் காலம் என்ற படியால் மேப்பல், செர்ரி மரங்களின் இலைகள் நிறம் மாறி காட்சி தந்தன. மரங்களின் இலைகlள் கீழே சொரிந்து கடந்தன. சில மாதங்களுக்கு முன் மரங்கள் நிறையப் பூக்கள். பார்க்க கண்கொள்ளாக் காட்சி. வைத்திய சாலைக்கு வந்தவர்கள் அதன் அழகைப் பார்த்து, ரசித்து பாராட்டி சென்றனர்.

Sirukathaigal

FREE
VIEW