Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: பொன் குலேந்திரன்

72 கதைகள் கிடைத்துள்ளன.

உயிருக்கு உயிர்

 

 எட்டுமாடி ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் உள்ன தீவிர சிகிச்சை பிரிவில்; முப்பத்திநாலாம் நம்பர் கட்டிலில், படுத்திருந்த ஒரு வயோதிப நோயாளி மூச்சுவிடச் சிரமப் பட்டுக்கொண்டிருந்தார். மூக்கில் ஒக்சிஜன் டியூப் இணைக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள மின் திரையில் இருதயத்தின் துடிப்பு வண்ணக் கோலங்களாகத் தோற்றமளித்தன. மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட சித்த வைத்தியர் சிற்றம்பலம் அம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது அவர் உயிர் பிழைப்பாரோ என்று எல்லோருக்கும் யோசனை. தீவிர சிகிச்சைப் பிரிவிக்கு வெளியே உள்ள பார்வையாளர்கள் அறையில்,


மெலனி டீச்சர்

 

 இலங்கைதீவில், வடக்கே உள்ள வன்னிப் பகுதியில் விவசாயிகள் வாழும் கிராமம் துணுக்காய். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குப் போகும் ஏ9 பெரும் பாதையில். தெற்கே, மாங்குளம் என்ற ஊர் அறுபது மைல் தூரத்தில் உள்ளது. மாங்குளத்திலிருந்து மேற்கே பதினொரு மைல் தூரத்தில் துணக்காய் கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்துக்கு அருகே மூன்று மைல் தூரத்தில் சுமார் 6000 மக்களைக் கொண்ட மலாவி கிராமமுண்டு. விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒருகாலத்தில் இருந்தது. விவசாயம் அவ்வூர் மக்களின் பிரதானத் தொழில். அவ்வூர்


தம்பி

 

 அன்று வெள்ளிக்கிழமை. நான் பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பியபோது மணி நான்கு. என் தம்பி என் கூட வரவில்லை. வாசலில் நான் வரும் மட்டும் என்றும் இல்லாத மாதிரி அம்மா காத்திருந்தாள். வழக்கத்தில் அவள் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருப்பாள். அப்பா வேலையாலை வர குறைந்தது ஏழுமணியாகும். அவளின் முகத்தில் எதோ பயமும் கோபமும் கலந்து தெரிந்தது. “என்னம்மா இந்த நேரம் வாசிலிலை நிக்கிறாய்?” என்னால் என் பொறுமையை அடக்க முடியவில்லை. வாயில்


வேலுவின் வேள்வி

 

 “கிளி… கிளி.. என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரமாய் தொண்டை கிழிய கூப்பிடுகிறன். ஏன் அம்மா எண்டு நீ கேட்கிறாய் இல்லை” தாய் மரகதம் சற்று கோபத்தோடு மகள் மனோகரியை கூப்பிட்டாள். மனோகரியின் செல்லப் பெயர் “கிளி”. அப்படித்தான் அவளை வீட்டில் கூப்பிடுவார்கள். யாழ்ப்பாணத்தில் குஞ்சு, இராசாத்தி, பேபி, பபா. மணி என்ற செல்லப் பெயர் சொல்லி அழைப்பது பேச்சு வழக்கில் உள்ளது. அூணாயிருந்தால் ராசன், தம்பி, குஞ்சன், என்ற பெயர் சொல்லி அழைப்பார்கள். மனோகரிக்கு அந்தப


பங்குக் கிணறு

 

 வக்கீல் வரதராஜா, கிருஷ்ணபிள்ளையின்; குடும்ப வக்கீல். அதோடு மட்டுமல்ல கிருஷ்ணபிள்ளையின் தந்தை இராமநாதபிள்ளையின் சொத்துக்களையும் கவனித்து வந்தவர். இராமநாதபிள்ளையின் மறைவுக்கு பின்னர் மகன் கிருஷ்ணபிள்ளையின் குடும்பவக்கீலாக இயங்கினார். ஆதனால் அவரின் சொத்து, குடும்ப விபரம் முழுவதும் அவருக்குத் தெரியும். வக்கீல் வரதராஜாவின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் கிருஷ்ணபிள்ளையின் மூத்த மகள் இராஜலஷ்மி. அவளது கேஸ் சம்பந்தப்பட்ட பைலை புரட்டியபடி சிந்தனையில் இருந்தார் வக்கீல். மூளைக்கு உரம் கொடுக்க அவருடைய கிளார்க் மேசையில் கொண்டுவந்து வைத்த சுக்கு போட்ட


விநோதன்

 

 லஷ்மி அமெரிக்காவில் கலிபோனியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிக வியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணனித்துறையில் , கொம்பியூட்டர் புரொகிராமராக வேலை செய்து கொண்டிருந்தாள். லஷ்மியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையில் ஊறிய ஐயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் அவள் தனிக் குழந்தை.. எவனோ ஒரு சாஸ்திரி லஷ்மி; பிறந்தவுடன் அவளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் திருமணத்துக்குப் பி;ன் பெரும் பணக்காரி ஆவாள் எனக் கணித்துச் சொன்னாhன் என்பதற்காக லஷ்மி என்ற பெயரை


மறதி நோய் ஆராச்சி

 

 கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின் நம்;பிக்கை. மனிதனுக்கு வயது ஏறும் போது நோய்களும் எங்கிருந்தோ வந்து உடம்பில் உறவாடத் தொடங்கும். இது இயற்கை. இருதய நோய், சிறு நீரக வியாதி, நீரிழிவு, அல்செய்மார், டிமென்சியா, எலும்புப்புரை, பார்கின்சன் , எபிலெப்சி என்ற கால்-கை வலிப்பு போன்ற நோய்கள் பல தோன்றுவது சர்வசாதாரணம். ஓவ்வொரு மரணத்துக்கும் ஒரு காரணம் தேவை. டாக்டர் சோமசுந்தரத்தின்


எதிர்பாராதது

 

 ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக இருக்கிறது. சிலர் அத்தேர்வை எவ்வளவு கவனமாக நடத்தினாலும் சிலசமயங்களில் தோல்வியடைந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது ஒன்று சில சமயம் நடப்பது வேறொன்று. பல்லினங்கள் வாழும் கனடாவில் பெண்களையோ அல்லது ஆண்களையோ இல்லறவாழ்வுக்குத் தேர்ந்தெடுப்பதில் எமது இளம் சந்ததி எவ்வளவு கவனமாக செயல்படுகிறார்கள் தெரியுமா? தீர்மானங்கள் எடுப்பதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். வயது ஏறுகிறதே என்ற கவலை தாயகத்தில்


தெருச் சிறுவன் தர்மசேனா

 

 எனக்கென்று கார் இருந்தும் ஆபிசுக்கு பஸ்சில் நான் போய் வருவது தான் வழக்கம். ஒன்று காரில் போனால் போய் வர பெற்றோலுக்கான பணச்; செலவு இருக்கும். இரண்டாவது டிரபிக்கில் கார் ஓட்டுவதென்றால் பொறுமையும,; கவனமும் வேண்டும். அதுமட்டுமல்ல ஆபிசுக்கு அருகே கார்பார்க் செய்வதற்கு பணம் கொடுத்தாக வேண்டும். என் வீட்டுக்கும் நான் வேலை செய்யும் இடத்துக்கும் பத்துமைல் தூரம். அவ்விடத்துக்கு டிரெயினிலும் போகலாம். ஆனால் ஸ்டேசனிலிருந்து இன்னும் பதினைந்து நிமிட நடை என் ஆபிசுக்கு. பஸ்சில் போனால்


பிரிவு

 

 “அப்பா நீங்களும் அம்மாவும் நீண்டகாலம் அக்காவோடை இருந்திட்டியள். இனி எங்களோடை வந்திருங்கோவன். உங்களுக்கு நானும் மகள் தானே” என்று தனது இரண்டாவது மகள் வனிதா டெலிபோனில் கேட்ட போது நாகலிங்கம் என்ன பதில் சொல்வதென்று யோசித்தார். தானும் மனைவியும் மூத்த மகள் புனிதாவின் டவுன் ஹவுஸ்; பேஸ்மண்டில் குடும்பம் நடத்துவது வனிதாவுக்கு ஏன் பிரச்சனையைக் கொடுத்தது என்று அவருக்கு விளங்க அதிக நேரமெடுக்கவில்லை. தாங்கள் கனடா வந்ததால் தான் பிள்ளைகளுக்குள் சண்டை வந்தது. நிம்மதியாக கொழும்பிலேயே இருந்திருக்கலாம்