கதையாசிரியர் தொகுப்பு: பொன் குலேந்திரன்
கொசு செய்த கொலை
சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது தொழில் நுட்ப அறிவை பாவித்து உதவியாளன் இன்ஸ்பெக்டர் ராஜனின் உதவியோடு கண்டு பிடித்தவர். துப்பறியும் சாம்பு என்ற பட்டப் பெயரால் பலரால் அழைக்கப்படும் அவர் மென் போருள் துறையில் பட்டம் பெற்றும், ஆர்வம் காரணமாக போலீசில் சேர்ந்தார். அவரின் தொழில் நுட்ப அறிவை போலீஸ் பாவித்தது. பல கேசுகளை
விண்மீனின் விடுகை
The message from a Star பிரபஞ்சம் தோன்றி சுமார் 14.5 பில்லியன் வருடங்கள் ஆகிறது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. இந்த பிரபஞ்சத்தில் சிறிதும் பெரிதுமாக கோடாத கோடி விண்மீன்கள் தங்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றன. இதில் சூரிய குடும்பமும் ஓன்று. அவ் வீண்மீன், பூமி உற்பட பல கிரகங்களோடு இயங்கி வருகிறது. இக் கிரகங்களில் பூமியில் மாத்திரமே ஜீவராசிகள் வாழ்கின்றன என்ற கருத்தை முற்றாக விஞ்ஞானிள் ஏற்கவில்லை. பிற கிரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி உண்மையை
நீரிழிவை நீக்கும் ஆராய்ச்சி
கார்த்திகேயனும் குமாரசிங்காவும் கொழும்பில் உயிரி வேதியியலில் ஆரய்ச்சி செய்பவர்கள் .கார்த்திகேயனின் சொந்த ஊர் நல்லூர் யாழ்ப்பாணம். குமாரசிங்கா பிறந்த இடம் தெற்கில் ருகுணு மாகாணத்தில் உள்ள திசமஹரகம. பண்டைய முருகன் கோவிலான கதிர்காமத்தில் இருந்து மேற்கே 11 மைல் தொலைவில் அமைந்துள்ள ருகுணு மாகாணத்தில் ஒரு காலத்தில் தலைநகராக இருந்த ஊர். நீரிழிவினால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 5 மில்லியனைத் தாண்டி அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சோறு இலங்கை வாசிகளின் பிரதான உணவு. மூன்று நேரமும்
செந்தூரனின் செவ்வாய்ப் பயணம்
முகவுரை “செவ்வாயுக்கு ஒரு பயணம்” என்ற நூலை எழுதிய மைக்கேல் கொலின்ஸ் என்பவர் வான்வெளியில் பயணித்தவர் , நாசா (NASA) ஒரு செவ்வாய் கிரகத்துக்கு ஒரு மனிதரை பயணிக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நூலில் வாதிடுகிறார், அக்கிரகத்தில் நிரந்தர காலனியை நிறுவுவதற்கான நீண்ட தூர நோக்குடன், மற்றும் உடல், தொழில்நுட்ப மற்றும் உளவியல் கோரிக்கைகளை நூலில் விவரிக்கிறார் . அந்த நூலை ஆர்வத்தோடு வாங்கி வாசிக்க ஆரம்பித்த செந்தூரன் அறிவியலில் பட்டம் பெற்றவன் வின்வெளி
பேசும் புளிய மரங்கள்
புளியங்காடு கிராமத்தில் அடர்த்தியான புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்த படியால் அந்த பின் தங்கிய கிராமத்துக்கு அந்த பெயர் வந்தது ரயில்வே நிலையத்தில் இருந்து அக் கிராமத்துக்குப் போக ஆறுமைல்களுக்குக் கரடு முரடான பத்தடி அகலமுள்ள கிரவல் பாதை. அதுவே கிராமத்துக்குப் போகப் பலரால் பாவிக்கப் பட்ட பிரதான சாலை . சுமார் நானூறு குடும்பங்கள் வாழும் அக் கிராமத்துக்கு மின்சாரம் கிடையாது.மோட்டார் வாகனம் குறைவு பல ஏக்கர் பரப்புள்ள தாமரைக் குளம். அதோடு