கதையாசிரியர் தொகுப்பு: பொன் குலேந்திரன்

83 கதைகள் கிடைத்துள்ளன.

மினிசோட்டாவின் கழுகு மலை

 

 அமெரிக்காவில் பெரிய ஏரிக்கு அருகே உள்ள மினசோட்டாவுக்கு வேலை நிமித்தம் என் குடும்பதொடு சென்றேன், என் மனைவி மாதங்கி மென் பொருள் போரியியலில் பட்டம் பெற்றவள். எங்களுக்கு விக்னேஷ் மட்டுமே ஒரு பிள்ளை. பத்து வயதான அவனுக்கு சிறு வயது முதல் கொண்டே பறவைகள் என்றல் ஆர்வம். பறவைகள் பார்ப்பது அவனின் பொழுது போக்கு. பறவைகள் பார்ப்பது என்பது வனப்பகுதிகளில் இயற்கையான வாழ்விடங்களில் அல்லது நகர்ப்புறங்களில் அவற்றின் மேம்பட்ட வாழ்விடங்களில், ஒருவேளை சொந்த முற்றத்தில் கூட பார்க்கப்படுவதாகும்.


ஆலமரத்து ஆவி

 

 இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு. சிவனுக்கு ஆலமரம். கணபதிக்கு அரசு. அம்மனுக்கு வேம்பு. *** திருகோணமலையில் இருந்த தென் மேற்கே சுமார் 50 கிமீ


வெள்ளச்சி என்ற வெள்ளை மான்

 

 வில்பத்து தேசிய பூங்கா (“குளங்களின் நிலம்”) இலங்கையில் உள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்காவின் தனித்துவமான அம்சம் இயற்கையான்குளங்கள் – இயற்கையான, மணல்-விளிம்பு நீர்ப் படுகைகள் அல்லது மழைநீரால் நிரம்பிய பள்ளங்கள். இலங்கையின் வடமேற்கு கரையோர தாழ்நில உலர் வலயத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா அனுராதபுரத்திற்கு மேற்கே 30 கிமீ ,மற்றும் புத்தளத்திற்கு வடக்கே 26 கிமீ , கொழும்பிற்கு வடக்கே சுமார் 180 கிமீ அமைந்துள்ளது. இந்த பூங்கா131,693 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ளது


வைரவர் கோவிலடிக் கிணறு

 

 யாழ்ப்பாணத்தில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் முக்கியமான நாற்சந்தி. அரசடி சந்தி. ஒரு காலத்தில் அங்கு ஒரு செழித்து வளர்ந்த அரசமரம் இருந்தது அனால் அதன் கீழ் புத்தர் சிலை இருக்கவில்லை, அதற்குப் பதிலாக வம்பளக்க மரத்தின் அடியை சுற்றி சலவைக் கற்கள் இருந்தன. இப்போது அந்த மரம் அங்கு இல்லை. அந்த இடத்தில் பாரதியார் குடிபுகுந்து விட்டார். ஆனால் அந்த சந்தியில் இருந்து கந்தர்மடத்தடி சந்திக்கு போகும் வீதியின் பெயர் இன்றும் அரசடி வீதி என்றே இருக்கிறது/


நந்திமித்ரா

 

 பல தேசத்து புராணக்கதைகளில் பலசாலிகளுக்கு ஒரு இடமுண்டு .உதாரணத்துக்கு மகாபாரதத்தில் பீமன். கடோத்கஜன் . ராமாயணத்தில் ராவணன். கும்பகர்ணன். மற்றும் பைபிள் கதைகளில் கோலியாத் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அதேபோன்றுதான் துட்டகைமுனு மன்னனுக்கு பத்து பலசாலிகள் வீரராக இருந்தனர் என்று மகாவம்சம் என்ற நூல் சொல்கிறது . எல்லாளனுக்கு எதிராக யுத்தத்தை கைமுனுவுக்கு அவர்கள் வென்று கொடுத்தார்கள் என்கிறது மகாவம்சம் .இது எவ்வளவுக்கு உண்மை என்பது தெரியாது என்றாலும் அந்த பத்து பலசாலி வீரர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வீர்களுக்கு


என்றும் நீ எங்கள் செல்ல மகன்

 

 பார்த்திபனுக்கும், வசந்திக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை பாக்கியம் கிட்டவில்லை அவர்கள் பல டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார்கள் . காரணம் அறிய பல பரி சோதனைகள் செய்ய வேண்டும் செலவாகும் என்றார்கள் . குழந்தை கிடைக்க சிலர் இனத்தவர்கள் சொன்னார்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் ஏறி இறங்காத கோவில் கள் இல்லை /எல்லாம் செய்தாகிவிட்டது குழந்தை அவர்களுக்கு பிறக்கவில்லை என்ற மனக்கவலை அவர்களை வாட்டியது ஒரு பிரபல


ஹாலோவீன் தினம்

 

 முன்னுரை ஹாலோவீன் தின இரவு பல நூற்றாண்டுகளாக அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஹாலோவீன் வரலாறு செல்டிக் திருவிழாவான சம்ஹைனிலிருந்து தொடங்குகிறது, இது கோடைகாலத்திற்கான ஏராளமான அறுவடையின் முடிவையும், இருண்ட, குளிர்ந்த குளிர்காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, தியவான், ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா மற்றும் பெரும்பாலான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஹாலோவீன் கொண்டாடுவதில்லை. குழந்தைகளும் ஹாலோவீன் தின இரவன்று அன்று தலையணை உறைகளுடன் வீடு வீடாக மாறுவேடத்தில் வீடு


மூலக்கதை

 

 இயக்குனர் மகாராஜாவின் “தீட்சை” என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது . அதை பலர் பாராட்டினார்கள். சில தமிழ் நாட்டு பத்திரிகைகள் அந்த படம் வெற்றி பெற மூலக் கதையே முக்கிய காரணம் என்று எழுதியது .அந்தக் கதை எழுதியது ஜெகநாத் சவுத்ரி என்ற மேற்கு வங்காள இந்திய மாநிலத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அவர் ரவீந்திர நாத் தாகூரின் தூரத்து உறவினர். படத்தின் ஆரம்பத்திலேயே மூலக் கதை ஜெகநாத் சவுத்ரி என்று குறிப்பிட்டு விட்டார் உருவாக்கியவர்


குப்பைக்குள் குழந்தை

 

 முன்னுரை குபைக்குள் கழிவுப்பொருட்கள் மட்டும் இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதற்குள் கோமேதகமும் இருக்கலாம். குண்டுமணியும் இருக்கலாம் அது நம் பார்வைக்கு சில நேரம் தெரியாமல் இருக்கலாம். மாரிமுத்து (மாரி) குப்பை அள்ளும் வேலையை அதிக வருடங்களாக சென்னை நகரசபைக்கு செய்து வருகிறான். அவன் திருணமாகி இரு குழந்தைகளை இழந்தவன். அவனின் மனைவி தங்கம் வீதி ஓரத்தில் தோசை சுட்டு பிழைப்பு நடத்துபவள். அதோடு சினிமா எடுப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் படத்தில் ஒரு காட்சியில் சில நிமிடங்கள்


ஊர் பெயர் தெரியாத உறவு

 

 எதிர்பாராத சந்திப்புகள் காதலில் போய் முடிவதுண்டு அதே மாதிரி தான் சாந்தி, ராம் என்ற ராமசாமியின் சந்திப்பும் . சாந்தி பிறந்தது வன்னியில் ஈழத்துப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் அருகே உள்ள உள்ள முல்லைத்தீவில். இராமசாமி பிறந்த ஊர் மலையகத்தில் உள்ள மஸ்கேலிய தேயிலை தோட்டம். இந்த இரு ஊர்களுக்கு இடையே உள்ள தூரம் சுமார் 340 கி மீ . சாந்தி ஈழத் தமிழிச்சி . ராமசாமி மலைநாட்டு தமிழன் ஆனால் இருவரும் மதத்தால் ,மொழியால்