கதையாசிரியர் தொகுப்பு: பூ.சுப்ரமணியன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

வாசகன்!

 

  சமீப காலத்தில் பூரணி என்ற எழுத்தாளருடைய சிறுகதைகள் , கவிதைகள் கண்ணியமிக்க வார ,மாத இதழ்களில் பிரசுரமாயின. அந்த பெண் எழுத்தாளர் பூரணி விளம்பரத்தையெல்லாம் விரும்புவதில்லை. அவர் தன்னுடைய ஆத்ம திருப்திக்ககதான் எழுதுவதாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடமெல்லாம் கூறுவார். அவருடைய படைப்புகளில் எல்லாம் சமூத்திற்கான உபயோகமுள்ள கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும். எனவே ரமணிக்கு பூரணியின் படைப்புகளை ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான் என்பதைவிட, அந்த பெண் எழுத்தாளர் பூரணியின் எழுத்துக்களை காதலித்தான் என்றுதான் கூறவேண்டும். . பூரணியின்


இலவு காத்தக் கிளி !

 

  விநாயகனே வேழமுகத்தோனே. . . . . .! எங்கோ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது . அப்போது “குட்மார்னிங் பாபு ! “ என்று லதாவும் , மைதிலியும் கோரஸாக காலை வணக்கம் பாபுவுக்கு கூறினார்கள். “வெரிகுட்மார்னிங் என்ன ஜோடிப்புறாக்களே, காலேஜ்க்கு புறப்பட்டு விட்டீங்கபோல் தெரியுதே“ என்றான் பாபு சிரித்துக் கொண்டே. . “ஆமாம் பாபு ! நீங்க உங்க ஆபீஸ்க்கு கெளம்ப நேரமாகல்லே “ என்றாள், லதா .


அன்புதான் இன்ப ஊற்று !

 

  அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர் பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக் கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம், உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். அன்பு வடிவான புத்த பகவானும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூறியதையும், அதனைக் கடைபிடித்தால், நாட்டில் அமைதிநிலை ஏற்படும் என்றும் கூறினார்கள். அவர் கூறியதெல்லாம்


கங்கை இன்னும் வற்றி விடவில்லை

 

  இராஜலெட்சுமி தியேட்டர் முன்புறம் உள்ள சாலையில், கூட்டம் கூடியிருந்தது. அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தை, ஏதும் காட்டிக் கொண்டிருக்கிறானா? என்று விக்னேஷ் அருகில் சென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு பார்த்தான். ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் அங்கு மயங்கிக் கிடந்தாள். கிழிந்த சேலையுடன் எண்ணெய் பசை காணாத தலைமுடி தோற்றம் அவளை ஏழைப்பெண் என காட்டிக் கொண்டிருந்தது.. சுற்றிலும் இருந்தவர்கள் வேடிக்கையில் மூழ்கியிருந்தார்கள். ஒருத்தராவது இடத்தை விட்டு நகரவில்லை. “ ஐயோ பாவம்! யார் பெத்த பெண்ணோ