கதையாசிரியர் தொகுப்பு: பூ.சுப்ரமணியன்

20 கதைகள் கிடைத்துள்ளன.

பெண் நினைத்தால்…….!

 

  விநாயகர் படத்தருகில் மணிபாரதி உட்கார்ந்து இருந்தாள். அவள் இருந்த அறைக்கு அருகில் உள்ள ஹாலில் அவள் அப்பாவும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பேசுவது மணிபாரதிக்கு தெளிவாக கேட்டது “ மணிபாரதியை எங்களுக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. உங்களுக்கும் எங்க பையன் சிவாவையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க. மத்த விசயங்களைப் பற்றியும் பேசலாமுன்னு நெனைக்கிறேன்” என்றார் மாப்பிள்ளையின் அப்பா தணிகாசலம். “ பேஷாகப் பேசலாம் சம்பந்தி. எனக்கு மணிபாரதி ஒரே மகள். நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்களோ? சொல்லுங்க…! என்று மணிபாரதியின் அப்பா


உன்னால் முடியும் கவிதா !

 

  பிள்ளையார்கோவில் திருப்பத்தில் கவிதாவும் அவள் உயிர்த்தோழியாகிய பத்மாவும் நடந்தார்கள் “கவிதா ! இன்று நீ எங்களுடன் புடவை எடுக்க சரவணா ஸ்டோர்க்கு வரணும். நாளை தமிழ் புத்தாண்டு. நாம் எல்லாரும் புதுப்புடவை கட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு தமிழ் புத்தாண்டுக்கு மறுநாள் வரவேண்டும். நீ என்ன சொல்றே ? “ பத்மா தன்னுடன் கூட வரும் தோழிகளைச் சுட்டிக்காட்டி “சரவணா ஸ்டோர்க்கு அவர்களெல்லாம், என்னுடன் டிரஸ் எடுக்க வர சம்மதித்து விட்டாங்க. நீ மட்டும் வரமாட்டேன்னு ஏன் பிகு


காவல் தெய்வம் !

 

  பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய விநாயகர் கோவில் அதுதான். சுற்றுப்பட்டிக் கிராமங்களிலே மிகப்பெரிய விநாயகர் கோவில், அதில ஆறடி உயரத்தில் அதிவீர விநாயகர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். கோவில் பின்புறத்தில் தார்ச்சாலை அதை அடுத்து மிகப் பெரிய கண்மாய் இருந்தது. அந்தக் கண்மாயில் மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி இருந்தால், அது ஒரு குட்டிச் சமுத்திரம்போல் காட்சியளிக்கும். அந்தக் கண்மாயில் தண்ணீர் நிரம்பி விட்டால், நெல் முப்போகம் விளையும் என்பதால், சுற்றுப்புறக் கிராம மக்கள் அனைவரும்


மகராசனாய் இரு !

 

  விநாயகர் படத்தருகில் இருந்த வெளிவாசல் லைட்டுக்குரிய சுவிட்சை ‘ஆன்’ செய்து விட்டு, சுவாமிநாதன் , வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அப்போது அங்கிருந்த நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. என்ன இந்த நேரத்திலே நாய் கொரைக்குதுன்னு என்று நினைத்துக் கொண்டே சுவாமிநாதன் சுற்றும் முற்றும் பார்த்தார். சுவாமிநாதன் தோற்றத்தை யாரும் பார்த்தால் திரைப்பட நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்தான் ஞாபகத்திற்கு வரும். இளைஞன் ஒருவன் அவர் வீட்டினை நோக்கி வந்து கொண்டு


சுகமான சுமைகள்!

 

  விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. வீடு அமைதியாக இருந்தது. ஹாலில், எப்போதும் கலகலப்பாகப் பேசித் திரியும் பாரதி, அன்று வீட்டின் அறையில் உள்ளே அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். அவளுடைய பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவர்களுக்கு வருத்தமாகவும், அதே நேரத்தில் அவர்களுக்குப் புதிராகவும் இருந்தது. அவள் அண்ணன் சிதம்பரம் கல்லூரிக்குச் செல்வதற்கு ஆயத்தமானான். அப்போது அம்மா, அவனை வழிமறித்து “சிதம்பரம், என்னடா நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிறே ,