கதையாசிரியர் தொகுப்பு: பூவை எஸ்.ஆறுமுகம்

14 கதைகள் கிடைத்துள்ளன.

போட்டா போட்டி

 

 நுங்கும் நுரையுமாகக் குமிழியிட்டுச் சென்றிருந்த காவிரியின் புதுவெள்ளப் பூரிப்பில் மனம் விட்டு லயித்திருந்த அவள், காற்றில் கலந்துவந்த குழல் ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். நினைத்தபடி முத்தையனைக் காணவில்லை. குணவதிக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. வழக்கமாக வரும் அந்த ஒற்றையடிப் பாதையை மீண்டும் ஒருமுறை நோக்கினாள். செடி மறைவிலிருந்து மெல்ல எழுந்த முத்தையனைக் கண்டவுடன் குணவதிக்குச் சந்தோஷம் எல்லை கடந்தது. தன்னை வழக்கம் போல ஏமாற்றி வேடிக்கை பார்க்கவே இப்படிச் செய்திருக்கிறான் முத்தையன் என்பதை அறிந்த குணவதி, சுய


செந்தட்டீ மம்மே பாரே!

 

 மூன்று முடிச்சுக்கள் விழுந்தன. வத்சலைக்கு ஏற்பட்ட மகிழ்வு இவ்வளவு அவ்வளவு அல்ல. எல்லாமே கனாப்போலவே தெரிந்தது. மங்கல நாண் அவளது விழி விரிப்பில் இழைந்தது. தனக்குத் தாலிபாக்கியம் அருளிய அலகிலா விளையாட்டுடையவனை நன்றி நெஞ்சுடன் தொழுதாள். மேனி புல்லரித்தது. நாதசுர முழக்கம் அவளுக்கு உணர்வையும் சுயநினைவையும் கொடுத்தது. தலையை உயர்த்த எத்தனம் செய்தாள். விழிகள் நாணம் பூண்டன. மூன்று முடிச்சுக்களை அருளிய சொக்கலிங்கத்தின் கடைவிழி நோக்கைச் சந்திக்க முடியாமல் திக்குமுக்காடினாள். மணப்பந்தல் மளமளப்பு மிஞ்சியது. ‘வாங்க, வாங்க!’


வாழப் பிறந்தவள்

 

 நடுச்சாமம். இரவு ஊர்ந்து கொண்டிருந்தது. ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத்தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை ஒன்றில் கருத்தை மையமிட்டுப் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் சேகரன். “டாக்டர் ஐயா.” “….” “டாக்டர் எசமான்” ஒன்றியிருந்த உள்ளத்தைத் திருப்பிவிட்டுக் குரல் குறுக்கிட்ட திசைக்குத் திருஷ்டியைத் திருப்பினார். வாசல் கதவு படீர் படீ ரென்று ஓசை ஓலமிடத் தட்டும் சப்தம் காதைத் துளைத்தது; ஓடிப்போய்த் திறந்தார். மூச்சுப்பிடிக்க ஓடிவந்து அறையில் விழுந்த கண்ணுச்சாமியைக் கண்டதும் டாக்டருக்குத் திகைப்பு


பிள்ளைக் கனியமுதே

 

 ‘பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே! அள்ளி யணைத்திடவே – என்முன்னே ஆடிவருந் தேனே!’ ரேடியோவினின்றும் எழுந்து காற்றில் மிதந்துவந்த இனிய கானம் டாக்டர் சுந்தரத்தின் மனத்தில் இன்பவலை பின்னியது. “கண்ணம்மா ஆம்; பேசும் பொற்சித்திரமேதான்! அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனத்தைப் பித்தாக்கினாள் அந்தக் கண்ணம்மா. ஆனால் தற்சமயம் இழந்த இன்பத்திற்கு நிரவல் கொடுத்து வாழ்விலே அமுத கீதத்தைப் பொழிகின்றாள் இந்தக் கண்ணம்மா.” டாக்டரின் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் பார்வை எதிரே சென்றது.


குழந்தை உள்ளம்

 

 செல்லம்மாவுக்கு உடம்பு மட்டும் குணமாயிருந்தா, மற்றப் பிள்ளைங்க மாதிரி எவ்வளவு குதூகலமா ஆடிப்பாடி விளையாடும்!” பக்கத்தில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டதும், சிங்காரத்திற்கு அந்த ஓர் எண்ணம் மாறி மாறித் தோன்றியது. மரம் செதுக்கிச் சீர்பண்ணிக்கொண்டிருந்த அவனுக்கு மேலே வேலை ஓடவில்லை. அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீ ர் பரவியது. “உடம்பு காயலாக் கிடக்கும் மகளை விட்டுப்பிட்டு ஏதுக்கு வேலைக்கு வரணும்? வந்த புறம் மனம் நொந்து ஏன் இம்பிட்டுத் துடிதுடிக்க வேணும்?” என்று வேறு சிந்தித்து

Sirukathaigal

FREE
VIEW