கதையாசிரியர் தொகுப்பு: புதுவை பிரபா

2 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை நடவு

 

  வகுப்பை முடித்துவிட்டு வெளியேறியபோதுதான் கவனித்தாள். சத்யாவின் கண்கள் சிவந்திருந்ததை. தொடர்ச்சியாக அழுதது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேராசிரியை பிரவீணா, “சத்தியா. . . . .என்ன பிரச்சனைம்மா? உடம்பு கிடம்பு சரியில்லையா? ” சத்யா வார்த்தைகளால் சொல்லாமல், ஏதுமில்லை என்பதை தலையசைப்பால் சொன்னாள். “ஏய் . . . . பொய் சொல்ற. . . எனக்கு ஒன்னபத்தி நல்லா தெரியும். நீ எதுக்கும் அவ்வளவு சீக்கிரம் அழமாட்டீயே!” சத்யா அதை ஆமோதிப்பதுபோல்


இது கதையல்ல!

 

  மூன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்… ‘‘ஒரு ஊர்ல, ஒரு நிலா…’’ ‘‘ஐயோ பாட்டி! ஊருக்கு ஒரு நிலால்லாம் இல்ல. உலகத்துக்கே ஒரே ஒரு நிலாதான்..!’’ -கதையின் ஆரம்பத்திலேயே குறுக்கிட்டுத் திருத்தினாள் இலக்கியா. ‘‘சரி… அந்த நிலாவுல, ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம்…’’ ‘ப்ப்ர்ர்ர்…’ என்று சிரித்தாள் இலக்கியா. ‘‘நிலாவுல ஆக்ஸிஜனே கிடையாது பாட்டி. அப்புறம் எப்படி அங்கே அடுப்பு எரிக்க முடியும், வடை