கதையாசிரியர் தொகுப்பு: புதுமைப்பித்தன்

84 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லம்மாள்

 

  1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை


விபரீத ஆசை

 

  கதை ஆசிரியர்: புதுமைப்பித்தன் தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு, மோளம் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுபத்தி, எருமுட்டை கலந்த வாசனை தூரத்துப் படை எல்லாம் மெட்ராஸ் பிண ‘வாசனை நாற்றம்’ கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்துச் சிந்தனையையும் தாக்கியது. நான் இப்பொழுது நிற்பது என் வீட்டு மொட்டை மாடி. மனிதனுக்குப் பிணத்தைப் பார்க்கும் ஆசை, எல்லா ஆசைகளையும் விடப் பெரிது. பயத்தில் பிறந்த ஆசையோ என்னவோ! அது ஒரு பணக்கார பிணம். அதாவது


ஒரு கொலை அனுபவம்

 

  கதை ஆசிரியர்: புதுமைப்பித்தன் இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை விளக்கு. அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான். உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே. ஆசாமி தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன். இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத் தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன் என்ன அங்கு


பித்துக்குளி

 

  கதை ஆசிரியர்: புதுமைப்பித்தன் மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு மலை மறைவிலே கொட்டிக் குதூகலித்து விளையாடுகிறாள். வாலிபனுக்குக் காதல் தோன்றும். கவிஞனுக்குக் கனவு தோன்றும். அறிவில் முதியவனுக்குச் சாந்தி தோன்றும் அந்த இடத்திலே. சுற்றிலும் காயல் நீலவானைத் தழுவியது. அதன் ஓரத்திலே கமுக மரங்களைக் குழைந்து தழுவின காதற் கொடிகள் – மிளகுதான். அந்த மிளகுக் கொடி… உள்ளத்தையும் உடலையும்