கதையாசிரியர் தொகுப்பு: புதியமாதவி

8 கதைகள் கிடைத்துள்ளன.

இந்த வாரம் ராசிபலன்!

 

 இரவு நேர கால்செண்டர்கள் குறித்து ஓர் அலசல் ரிப்போர்ட் எழுதியதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிறகென்ன? அதில் உலகமயமாதலை ‘வாங்கு வாங்கு’ என்று போட்டு வாங்கிவிட்டேன். அதுமட்டுமல்ல இப்போதெல்லாம் உலகமயமாதல், பெண்ணியம் என்கிற மாதிரி வெய்டேஜ்ஜான சமாச்சாரங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் அதில் கட்டாயம் எழுதியே ஆகவேண்டும் அது எப்படி எல்லாம் பாலியல் உறவுகளைப் பாதிக்கிறது என்று. இந்தியாடுடே ஜிந்தாபாத். இதற்கெல்லாம் அவர்கள் ஏகப்பட்ட சர்வே நடத்தி புள்ளிவிவரத்துடன் கட்டாயம் நமக்கு வேண்டியதைத் தந்திருப்பார்கள். நமக்கு எந்த பிரசண்டேஜ் வேணுமோ


உடையும் புல்லாங்குழல்கள்!

 

 இளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளுக்கு அவன் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளுக்குச் சங்கீதம் பற்றி எல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி எதுவும் தெரியாது. எப்போதாவது தனியாக இருக்கும்போது நல்ல பாட்டு கேட்கப்பிடிக்கும். அதுவும் நாமே இந்தப் பாட்டு கேட்க்கலாம் என்று முடிவு செய்து பாட்டுக்கேட்பதை விட அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் இரவு பத்து மணிக்குப் பின் பாட்டுப் போடுவார்கள் பாருங்கள். என்ன பாட்டு போடப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அப்படிக் கேட்பதில் தான் எவ்வளவு சந்தோஷம்.


புதிய ஆரம்பங்கள்!

 

 கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக திரெளபதிகளின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) தன்னுடைய புதினங்களில் நாடகங்களில் பெண்ணுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அண்மையில் உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானாவின் செய்திக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த அவலங்கள் நடப்பது தெரியவந்துள்ளது. திரெளபதி நாடகத்தைப் பார்த்து


அம்மாவின் நிழல்!

 

 ‘பொண்ணுடா அப்படியே உங்க அம்மா மாதிரி மூக்கும் முழியுமா என்னடா ஆனந்த் சத்தமே இல்லே..பொண்ணு பிறந்திட்டேனு கன்னத்திலே கையை வச்சி உக்காந்திட்டியா?’ பாட்டியின் குரலில் வழிந்த சந்தோஷத்தை அப்படியே நகல் எடுத்துக் கொள்ள முடியாமல் செல் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான். பொண்ணு பிறந்ததில் அவனுக்கு ஒன்றும் வருத்தமில்லை. ஆனால் என்ன காரணம் கொண்டும் தன் அம்மாவின் சாயலில் இருக்கக்கூடாது. இந்த நினைப்பே அவனை என்னவோ செய்தது. ஆபீஸ் வேலையில் ஒவ்வொரு பை·லாக


தீபாவளிப் பரிசு

 

 மும்பை நகரமே வெளிச்சத்தில் நனைந்துக்கிடந்தது. வரப்போகும் தீபாவளிக்கு இது வெறும் ஒத்திகைதான் என்று அங்கங்கே வெடிக்கும் வெடிச்சத்தங்கள் பறைச்சாற்றிக்கொண்டிருந்தன. ஸ்டேஷனில் யார்க்கையில் பார்த்தாலும் தீபாவளிப்பரிசுப் பெட்டிகள். அவரவர் உத்தியோகத்துக்கு ஏற்ப பரிசுகளின் ரகங்களும் தரங்களும் வேறுபட்டது. தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கும் வங்கியில் கடைநிலை ஊழியர்கள் கூட மாலையில் வீடு திரும்பும்போது மீராரோட், பயந்தர், கல்யாண், தாராவி, செம்பூர் என்று தன் வீடுகளுக்கு டாக்சியில் பரிசுப்பொருட்களை அள்ளிப்போடுக்கொண்டு போனார்கள். வங்கியில் அதிகாரியாக இருக்கும் அவளுக்கு வருகின்ற பரிசுகளுக்கு கேட்கவா