கதையாசிரியர் தொகுப்பு: பி.எஸ்.ராமையா

1 கதை கிடைத்துள்ளன.

நட்சத்திரக் குழந்தைகள்

 

 ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’ ‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப…. ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!’