கதையாசிரியர் தொகுப்பு: பிரபஞ்சன்

18 கதைகள் கிடைத்துள்ளன.

பிம்பம்

 

 கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், தட்டுவது யார் என்று எனக்குத் துல்லியமாகவே விளங்கியது. அதுதான் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் வரும். அதற்கு நேரம் காலம் கிடையாது. கிடைப்பதில்லை என்பதுவுமே ஒரு காரணம். என்னுடனே வளர்ந்து நானாகவே ஆகிவிட்ட அதுக்கு என் மேல் இருக்கும் ஸ்வாதினமும் ஒரு காரணம். கதவைத் திறந்தேன், அது உள்ளே வந்தது. உட்காரச் சொன்னேன். அது உட்காரவில்லை. நான் மட்டும் ஏற்கெனவே படுத்திருந்த என் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்துக் கொண்டு அதையே பார்த்துக்


சிறுமை கண்டு…

 

 கொண்டப்பாவை எல்லாரும் பரம சாது என்று சொல் வார்கள். அப்படிச் சொல்வது அவனுடன் அலுவலகத்தில் பணி ஆற்றுபவர்கள்தாம். சிலர், பசு என்றும் கூறுவார்கள், மனிதனாகிய அவனை. அப்படிச் சொல்வது இழித்துரைப்பதாகாது. அவ்வளவு சாந்தமானவன் என்பதை அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். அவனது அதிகாரிகள், அவனை ஒரு லட்சிய எழுத்தராக மற்றவர் களுக்குக் குறிப்பாகப் புதிதாக அலுவலில் சேர்ந்த கத்துக் குட்டி களுக்கு உதாரண புருஷனாகக் காட்டுவார்கள். கொண்டப்பா தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. அதனால், வயதாகாமல் இருப்பதில்லையே. ஆகிக்


அபஸ்வரம்

 

  அப்பா இன்று கோர்ட்டுக்குப் போக வேண்டும். அப்பாவோடு என்னையும் போகச் சொன்னாள் அம்மா, எனக்கு அலுவலகம் இருந்தது. ஆனாலும் அப்பாவோடு வெளியே போவதைவிட எனக்குச் சந்தோஷம் தருகிற காரியம் வேறு என்ன இருக்க முடியும்? நான் ஒப்புக் கொண்டேன். விடியலிலேயே எழுந்து, குளித்துத் தயாராகிவிட்டேன். “கோர்ட்டுக்குப் பதினோரு மணிக்கு மேல் வந்தால் போதும்” என்று வக்கில் சொல்லியனுப்பியிருந்தார். சரியாகப் பத்தரை மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். அப்பா வழக்கமான அந்தத் தொள தொள கதர்ச் சட்டை, பளீர்


சைக்கிள்

 

 கன்றுக்குட்டி மாதிரி நின்றிருந்தது சைக்கிள். வலது கைப்பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு, கன்றுக்குட்டி பார்ப்பது போலவே மாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தது. நடுக் கூடத்தில் கோவணத்தோடு உட்கார்ந்து கொண்டார் மாமா, அவருக்கு முன்னால் அரைப்படி நல்லெண்ணெய்க் கிண்ணம். அவ்வளவையும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் அரைக்கித் தேய்த்து உடம்புக்குள் றெக்கியாக வேண்டும் மாமாவுக்கு. ‘சனி நீராடு’ என்கிற வாக்கியத்தை அசரீரி உத்தரவாகவே எடுத்துக் கொண்டு சனிக்கிழமை அரை நாளை எண்ணெய் ஸ்நானத்துக் கென்று அவர் அர்ப்பணித்துக் கொண்டார். முதலில்


காலம் இனி வரும்

 

 பக்கத்தில், நீளமாய் ஒரு காலை மடக்கியும் ஒன்றை நீட்டியும், சற்றே வாய் பிளந்து, வெற்றிலைக் காவிநிறப் பற்கள் தெரிய, கைகளைப் பரப்பியவாறு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பிரபுவைப் பார்த்தாள் சத்யா. ‘இரையுண்ட மலைப் பாம்பு படுத்துக் கிடப்பதுபோல’ என அவள் மனதில் சட்டென்று உருவகம் ஒன்று தோன்றி மறைந்தது. ஒரு பசும் கன்றையோ, அல்லது ஒரு மான் குட்டியையோ விழுங்கி மலைப்பாம்பு, படுத்துச் சீரணிக்கப்படும் பாட்டைத் தான் நேரில் கண்டிக்கிறோமா? இல்லை. பின் எப்படிப் பிரபு படுத்துக்


இரண்டு நண்பர்களின் கதை

 

 ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில் நாட்டில், சுந்தர சோழன் தெருவில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் பிறந்தவர்கள். ஒன்றாகவே பள்ளிக்கூடம் சென்றார்கள். போகும் வழியில் மாந்தோப்பு இருந்தது. காவலும் இருந்தது. தோட்டக்காரர் இல்லாத பொழுதுகள் எது என்பதை செல்வம் அறிவான். பத்துக் காய்களாவது / பழங்களாவது அடிக்காமல் அவன் பள்ளிக்கு வருவது இல்லை. மாடன், இதுபோன்ற காரியங்களில் இறங்கும் வீரனும் இல்லை; நியாயவாதியும் இல்லை.


நாளைக்கும் வரும் கிளிகள்

 

 வீட்டைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமானதாக இல்லை. அவர் பெயரைச் சொன்னால், சின்ன குழந்தையும் வழிகாட்டும் என்று ஆசிரியர் சொன்னது பொய் இல்லை. பஸ்ஸைவிட்டு இறங்கி அவன் விழித்துக்கொண்டு நிற்கும்போது, ரோட்டோரம் இளநீர் விற்கும் அம்மாள் அவனை அழைத்து, மாமாவைப் பார்க்க வந்தீங்களா என்று கேட்டு, முகவரியையும் சொன்னார். மாமாவின் வீடு, ஊருக்கு வெளியே, இன்னும் காங்கிரீட் காடாகிவிடாத, மரங்கள் மற்றும் மைதானம் காணப்படும் பகுதியில் ஒரு மாந்தோப்புக்குள் இருந்தது. அத்தனை காலையிலும் நிறைய கார்கள் தோப்புக்குள்


அப்பாவு கணக்கில் 35 ரூபாய்

 

 அப்பப்பா…… நல்லவேளை பேருந்தில் கடைசி இடமானாலும் ஜன்னல் ஓரமாக எனக்கு இருக்கை கிடைத்துவிட்டது. இந்த ஆறு மணி வண்டியைத் தவற விட்டு விடக்கூடாது என்று ஒடி வந்திருந்தேன். சரியாகப் பத்து மணிக்கு ஊரில்கொண்டு போய்ச் சேர்த்து விடுவார் ஓட்டுநர். அடுத்த நாலைந்து நிமிடத்தில் வீடு. அம்மா தூங்கியிருக்க மாட்டாள். அகாலத்தில் போய் அம்மாவை. இந்த வயசான காலத்தில் எழுப்பித்தொல்லைப்படுத்த வேண்டாமே! பேருந்தில் இடம் தேடி மனிதர்களும். மனிதர்களைத் தேடி ஆரோக்கியம் தரும் பழங்கள். மறுநாள் காலையிலேயே லட்சாதிபதியாக்குகிற


அன்னை இட்ட தீ

 

 ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான் இருந்தேன். இரண்டு முடிவுகளையும் நான் மீறும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. இது இப்படித்தான். நான் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று என் டயரியில், டிசம்பர் மாதத்துக் கடைசி நாளில் எழுதி வைக்கிறேனோ, அதே காரியங்களை ஜனவரி முதல் தேதியிலிருந்தே செய்யும்படியாக ஆகிவிடும். என் நண்பர், அழகிய புதுவருஷத்து டயரி ஒன்றை எனக்கு அன்பளித்தார். டிசம்பர் மாதத்துக் கடைசி


நீரதன் புதல்வர்

 

 அலுவலகத்தைவிட்டு வெளிவந்தான் மூர்த்தி. வாசலில் நின்றிருந்த போலீஸ்காரன் அடித்த வணக்கத்தை அசிரத்தையாக எதிர்கொண்டான். தெருவில் இருட்டு இல்லை. அந்த நாட்டு முதல் அரசர் பணி செய்யும் பகுதி என்பதால், தெரு இருளாமல்பார்த்துக் கொள்வார்கள். ஆனால், தெருவில் நாய்கள் அதிகமாகி இருக்கின்றன. மனிதகுலத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டு இருக்கும் அவைதான் எங்கு போகும்? அவனுடைய நண்பன் செல்லில் வந்தான். வந்துகொண்டு இருப்பதாகவும் அலுவலகத்தில் இன்று வேலை அதிகம் என்றும் சொன்னான். ஆறு மணிக்கு வெளிப்பட்டிருந்தால், அலுவலக காரில் சென்று