கதையாசிரியர் தொகுப்பு: பா.சத்தியமோகன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்ணுரிமை

 

  ஏகாம்பரம் முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவர். பெண்ணுரிமைக்காக வாதாடுபவர். மேடைகளில் முழங்குபவர். அன்றைக்கு விடுமுறை தினமாக இருந்ததால், மாலையில் தன் 15, 17 வயதுப் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு, அருகிலிருந்த மைதானத்துக்குச் சென்று, வியர்க்க விறுவிறுக்க இரண்டு மணி நேரம் ஃபுட்பால் விளையாடிவிட்டு வந்தார். ஹால் ஊஞ்சலில் சோகமாக உட்கார்ந்திருந்தாள் அவரின் மகள் சித்ரா. “என்னம்மா வருத்தமா உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டார் அன்பாக. “பெண்ணுரிமை அது இதுன்னு மேடையில நீங்க பேசுறது ஊருக் கான உபதேசம் தானேப்பா?”


சந்திப்பு

 

  ஆசிரியர் ஆனந்தக் கண்ணன் கண்கள் மூடியபடி அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தார். “சார், இன்னும் கொஞ்ச நேரத்துல வக்கீல் வரதராஜன் வந்துடுவாரு. அமெரிக்காவுல பிரபல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா கொடிகட்டிப் பறக்குற சடகோபன் சென்னைல லேண்ட் ஆயிட்டாராம். வந்துட்டே இருக்கேன்னு போன் பண்ணாரு. அப்புறம்… நம்ம இளம் புயல் ஹீரோ விஸ்வம் ஷ¨ட்டிங் முடிச்சுட்டு, ஆன் தி வே-ல இருக்காராம். இப்படி மொத்தம் இருபது பேர் இன்னிக்கு ஒண்ணாக் கூடறோம். அத்தனை பேரும் உங்க கிட்டே படிச்ச