கதையாசிரியர் தொகுப்பு: பா.இராதாகிருஷ்ணன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஜெனீஃபர்

 

  ஜெனீஃபர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது தாய், தந்தை இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனதால் ஜெனீஃபர் தனது தாத்தா, பாட்டி பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தாள். அவளின் பாட்டி மார்கரெட் ஒரு ஆசிரியை, தாத்தா மார்டின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஜெனீஃபரின் தாத்தா, பாட்டி இருவரும் கோடை வெயிலில் நிழல் தரும் மரம் போலத் தங்கள் பேத்தியைக் காப்பாற்றி வந்தனர். வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. ஜெனீஃபரின் பாட்டி ஆசிரியர் என்பதால்


கல்விக்கு மரியாதை

 

  வீரக்குமராபுரியை வீரக்குமரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவியின் பெயர் வீரவள்ளி. வீரக்குமாரபுரி அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற அழகிய திருநாடு. அங்கு இயற்கை வளங்களுக்குப் பஞ்சமேயில்லை. மாதம் மும்மாரி பொழிந்து பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். அவனது ஆட்சியில் அந்நாட்டு மக்கள் பசி,பஞ்சம் என்பதை அறியாமலேயே இருந்தனர். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பெயர் வீரவேந்தன். இளையவன் பெயர் வீரசேனன். இளையவன் வீரசேனன் அரசியாருக்கு செல்லப்பிள்ளையாக விளங்கினான். இருவருக்கும் உரிய பருவம் வந்தவுடன்


காலம் உன் கையில்

 

  காலம் மணி ஒன்பது. சூரியக் கதிர்கள் முருகன் வீட்டையும் எட்டிப்பார்த்தது. ஆனால், இன்னும் முருகன் எழுந்திருக்கவேயில்லை. “முருகா, எழுந்திரு, எழுந்திரு’ என அவன் அப்பா சத்தம் போட்டபடியே வந்தார். ஒரு முறை தலையைத் தூக்கிப் பார்த்த முருகன் “கொஞ்சம் இருங்கப்பா’ என்று சொல்லி விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டான். “ஏங்க, குழந்தைக்கு இப்பதான் பரீட்சை முடிஞ்சிருக்கு… கொஞ்சம் நேரம் தூங்கட்டுமே.. விடுங்க…’ என்று அவன் அம்மா முருகனுக்காக பரிந்து பேசினார். அதைக் கேட்டதும் முருகன்


சவால் விடுகிறோம்

 

  கழுகு ஒன்று வானத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்து. அது அந்த ஊரில் வசித்து வந்த பழமையான கழுகு. அது எங்கு நோக்கினும் வானத்தைத் தொடத் துடிக்கும் கட்டடங்களும், அலைபேசிக் கோபுரங்களும்தான் தெரிந்தன. பசுமை போர்த்திய மரங்களை எங்கும் காணவேயில்லை. சரி, நமது பறவை நண்பர்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தால், எங்கும் யாரையும் காணவில்லை. கழுகு யோசித்தது – இந்த மனிதர்கள் தங்களுடன் படித்த பழைய நண்பர்களை அழைத்து அவ்வப்போது விழா கொண்டாடுகிறார்களே, நாமும்


ஓய்வு நேர உலகம்

 

  அன்று பள்ளியில் இரண்டாம் பீரியட். பள்ளியின் அலுவலக உதவியாளர் ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் காண்பித்து கையெழுத்துப் பெற்றுக் கொண்டிருந்தார். அந்தச் சுற்றறிக்கையைப் படித்த ஆசிரியர்கள் தன்னையறியாமல் சிரித்தார்கள். சிலர் பதட்டமானார்கள். சிலர் திரும்பி தேதிக் காலண்டரைப் பார்த்தார்கள். அந்தச் சுற்றறிக்கையில் கண்ட வாசகம் இதுதான். வரும் 8-ம் தேதி நம் பள்ளிக்கு மாவட்ட கல்வி அதிகாரி, திடீர் ஆய்வு நடத்தவிருக்கிறார். அவர் வரும் நேரம் ஏதும் குறிப்பிடவில்லை. அன்று

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: