கதையாசிரியர் தொகுப்பு: பா.அய்யாசாமி

64 கதைகள் கிடைத்துள்ளன.

மயானம்

 

  அனைவரின் இருப்பை அழிக்கும் கடைசி இடம். ஓ வென்று இருந்தது, கடைசியாக எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று எரிந்தபடி இருக்க, அருகே உள்ள கொட்டகையில் புல் பூண்டு முளைத்து , பயன்பாடாற்ற கொட்டகையில் ஆடு ஒன்று விளையாடிக் கொண்டு இருந்தது, தன் குட்டியுடன். வெட்டியான் ஈசானம் ஓரமாக அமர்ந்து தனது காலை நேர சிற்றூன்டியை மதிய நேரத்தில் உண்டுக் கொண்டு இருந்தான். அவன் மனைவி தண்ணீர் எடுத்து வந்து வைத்துவிட்டு, யோவ்..காசு இருந்தா கொடுய்யா மதியத்துக்கு குழம்பு


படமா?பாடமா?

 

  மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க மேலாளர் காவலாளி மணியிடம், ஓடிப்போய் திறந்தான் மணி முதலாளிதான் வந்து இருந்தார், தனது திரையரங்கத்திற்கு மாதம் இருமுறை வந்து பார்வையிடுவது அவரது வழக்கம். புதுப்புது சினிமாவா எடுத்துப்போட்டும் கையிலே நாலு காசுப் பார்க்க முடியலை, என்ன படமா எடுக்கிறானுங்க, நம்ம உசிரைத்தான் எடுக்க்றாஙக என்றும் திட்டுவார், ஏதோ இதை நம்பி ஐந்து குடும்பங்கள் இருக்கே


வலியும் வடுவும்

 

  டாக்டர், இவங்க என் பொண்ணு, கலா. கொஞ்ச நாளா மனதே சரியில்லாம இருக்காங்க!? போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வமில்லை, அவங்களுக்கு நீங்கதான் டாக்டர் கவுன்சிலிங் கொடுக்கனும் என்று கலாவின் அப்பாவும், அம்மாவும் டாக்டரிடம் ஏக்கத்துடன் கூறி நின்றனர். ஏன்? என்ன செய்யுது இவங்களுக்கு ? சொல்லத் துவங்கினர், டேய் திரு! டிபன் ரெடி, சாப்பிட வா, லன்ச்சுக்கு உனக்குப் பிடித்த உருளைக் கிழங்கு பொரியல் , லெமன் சாதமும் செஞ்சு இருக்கேன், மிச்சம் வைக்காமல்


விடியாத இரவுகள்

 

  ராதா,நல்லா யோசித்துக்கோ, நீ சுமக்கிறது சரியில்லை, சீக்கிரமாக ஒரு முடிவை எடு,அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள், உங்க அத்தையே அப்படி சொல்றாங்க, அப்புறம் நீ ஏன் கவலைப்படுகிறாய்? என அறிவுறுத்திக் கொண்டு இருந்தாள் மாலா. மாலா ராதாவின் பள்ளிக்காலத் தோழி, இவளைப் பார்க்க ஒரு மாலை வேளையில் வந்து இருந்தாள். ராதா, மணமாகி ஐந்தே மாதங்கள் தன் கணவனுடன் வாழ்ந்து, பதினாறு வார கருவை சுமக்கும் இளம் விதவை பெண். உறவு என்று


தோற்றப்பிழை

 

  அம்மா,ரேவதி! இன்றைக்கு ஒரு நாள் லீவு போடுடீ. அம்மா உடம்புக்கு முடியலை, வேலை செய்கிற வீட்டிலே இன்றைக்கு அவங்க பொண்ணை பார்க்க வருகிறார்களாம், பலகாரம் எல்லாம் செய்யனும், செத்த நீ போய் செஞ்சு குடுத்திட்டு வாம்மா! உனக்குத்தான் அதெல்லாம் நல்லா தெரியுமே, ரேவதி, அம்மாவிற்காக இன்று மட்டும் செய் என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள் ரேவதியின் தாயார் கமலா. கமலா, தன் கனவனை இளம் வயதிலேயே இனம் புரியாத நோய்க்குப் பறிகொடுத்த, அதிகம் படிக்காத ஏழைத்தாய். வீடு