கதையாசிரியர் தொகுப்பு: பாவண்ணன்

18 கதைகள் கிடைத்துள்ளன.

பிருந்தாவனம்

 

  கடையில் இருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித் திருப்பி ரசித்துக்கொண்டு இருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வரும்போது எல்லாம் பொம்மைக் கடைகளில் நிற்பதும் வேடிக்கை பார்ப்பதும் பழகிவிட்டது. எடுப்பாள். ரசித்துப் பார்ப்பாள். விலை கேட்பாள். பிறகு, ஒரு பெருமூச்சோடும் கசந்துபோன புன்னகையோடும் வைத்துவிடுவாள். ”வாங்கு அண்ணி” என்று நானும் பல முறை தூண்டிப் பார்த்துவிட்டேன். ”ஐயையோ… அதெல்லாம் வேணாம்!” என்று வேகமாகத் தலையாட்டி மறுத்துவிடுவாள். ”பொம்மைக்கெல்லாம்


மண்ணாங்கட்டித் தாத்தா

 

  தேய்பிறை நிலா வெளிச்சத்தில் வேப்ப மரத்தின் நிழல் ஏதோ கறுப்புத் துணியை விரித்த மாதிரி பாதையில் படிந்திருந்தது. மரம் கொஞ்சம்கூட அசையவில்லை. ஒரே புழுக்கம். மரத்தடியில் போட்டிருந்த கட்டிலில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி மண்ணாங்கட்டித் தாத்தா படுத்திருந்தார். தூக்குவாளியைக் கீழே வைத்துவிட்டு, ‘தாத்தா சாப்பாடு எடுத்தாந்து இருக்கேன். ஆயா குடுத்துட்டு வரச் சொல்லிச்சி…’ என்றேன். பார்வையை என் பக்கம் திருப்பிய தாத்தா, மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தபடி, ‘தாத்தாவுக்குப் பசிக்கலை ராஜா, எனக்கு


துணை

 

  மணமகள், மண்டபத்திலேயே இல்லை என்கிற செய்தி முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரம் முன்புதான் தெரிந்தது. நான்கு ஆண்டுகளாக ரகசியமாகக் காதலித்தவனோடு கிளம்பிப் போய்விட்டாள் என்றார்கள். இடி இறங்கியதைப்போல உட்கார்ந்துவிட்டாள் அம்மா. தம்பிகளும் தங்கையும் அவர்களுடைய குடும்பங்களும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல், குழப்பத்தோடு நின்றனர். புதுச் சட்டை அணிந்திருந்த சின்னப் பிள்ளைகள் மட்டும் உற்சாகம் குறையாமல் நாற்காலிக்கு நடுவில் ஒளிந்து மறைகிற விளையாட்டு ஆடினார்கள். முழங்கிக்கொண்டு இருந்த நாகஸ்வரமும் மேளமும் நின்றன. நண்பர்களுடன்


அல்லி

 

  ஒன்று திரைச் சீலையை ஒதுக்கும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அல்லி. பணிப்பெண். ஒருகணம் நேருக்கு நேர் பார்த்த பின்னர் சட்டென்று பார்வையைத் தாழ்த்தி விளக்கின் பக்கம் சென்றாள் அவள். கையிலிருந்த கலயத்திலிருந்து எண்ணெயை ஊற்றித் திரியைச் சரிப்படுத்தினாள். ஒரு பெருஞ்சுடர் எழுந்து சில கணங்களில் தணிந்து சீராக எரியத் தொடங்கியது. விரலில் இருந்த எண்ணெய்ப் பிசுக்கைத் தலையில் தேய்த்தபடியே ‘இன்னும் தூங்கவில்லையா ராணி ‘ எனறு கேட்டாள். பணிப்பெண்ணை வெளிச்சத்தில் நன்றாக உற்றுப் பார்த்தாள்


பூனைக்குட்டி

 

  மருத்துவமனைச் சீருடையைக் களைந்து விட்டு வீட்டிலிருந்து அம்மா கொண்டு வந்திருந்த வெளிர்நீல நிறப்பின்னணியில் மஞ்சள் பூப்போட்ட கவுனை அணிந்து கொண்டாள் வைதேகி. முன்பெல்லாம் உடலை இறுக்கிப் பிடித்தபடி இருக்கும் கவுன் இப்போது தொளதொளவென்றிருந்தது. நிமிர்ந்ததும் அவள் பார்வையை சட்டெனத் தவிர்த்து சன்னல் பக்கமாக வேப்பமரங்களைப் பார்ப்பதுபோல யாருக்கும் தெரியாதபடி விழியோரம் தேங்கத் தொடங்கிய கண்ணீர்த் துளிகளை விரல்களால் துடைத்துக் கொண்டாள் அம்மா. வைதேகியின் அருகில் நெருங்கிச் சென்ற அப்பா முதுகுப்பக்கமிருந்த கொக்கிகளைப் பொருத்தினார். பிறகு அவரே