கதையாசிரியர் தொகுப்பு: பாளையம் சையத்

1 கதை கிடைத்துள்ளன.

நெடி

 

  சபூரா பீவிக்கு உடம்பு முழுக்க ரணமாக வலித்தது. உடல் நெருப்பாய்க் கொதித்தது. அவளால் உட்கார்ந்து பீடி சுற்ற முடியவில்லை. எட்டாவது படிக்கும் மகள் வஸீலாவை அழைத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று விபரத்தைச் சொல்லி மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். இப்போதெல்லாம் அடிக்கடி இதுபோல் சுகவீனம் ஏற்பட்டு விடுகிறது. இரண்டு கால்களும் கடுமையாக வலித்தன. தலைவலி வேறு பிராணனை வாங்கியது. பீடித்தட்டை மடியில் வைத்து பீடி சுற்ற ஆரம்பித்தாள். ஆனால் உடல் வலியைச் சமாளிக்க முடியவில்லை.