Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: பாரதியான்

5 கதைகள் கிடைத்துள்ளன.

அவளுக்கு யார் இருக்கா?

 

  ”என்னங்க நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா…” காபி டம்ளருடன் கேள்வியையும் வைத்த மனைவியை ‘வந்தது வராததுமா ஆரம்பிச்சுட்டியா..?’ என்பது போல் ஏறிட்ட பரமன். காபி டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு ”போய் ப்ரிச்சுல தண்ணி எடுத்துட்டு வா” என்றபடி டிவி முன் கிடந்த சேரில் உட்கார்ந்தான். அவ்வளவுதான்! ”உங்களுக்கு என்னப்பாத்தா கிறுக்கச்சி மாதிரிதான் தெரியும். அதான் ஒனக்கெல்லாம் எதுக்குடி பதில் சொல்லனும்னு பேச்ச மாத்துறீங்க.செய்ங்க அள்ளி அள்ளி, நானும் ஏம்புள்ளையும் நடுத்தெருவுக்கு வந்த பெறகாவுது யோசிப்பீங்களா?” அவளுக்கு


கடைசி வரை கணவன்

 

  இரவு மணி ஒன்று… விழிகளில் சொட்டுத் தூக்கமின்றி ஈஸிச்சேரில் சாய்ந்திருந்தார், நாதன். மனசு மொத்தமும் கனமாயிருந்தது. மாடியறையில்…தொடர் இருமல், கடுமையான அனத்தல், கொஞ்சமும் முடியாமையின் வெளிப்பாடு… “அய்யோ ஏதாவது கொடேன்…” ஈசானமான கெஞ்சல் டானிக், தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் சத்தம்னாலும் குறையாத இருமல். எதுவுமே நாதனை அசைத்துப் பார்க்கவில்லை. காலை தினசரியில் படித்த அந்த செய்திக்குள்ளேயே இருந்தார். முப்பத்தாறு வருடங்களாகச் செயலற்று படுத்த படுக்கையாக கிடக்கும் பெண்ணுக்குத் தன் கணவனே கட்டாய மரணம் கொடுக்க நினைப்பதா..!


கவலைப்பட வேண்டாம்…!

 

  எத்தனை நகரங்களுக்குப் போனாலும் மதுரையின் அனுபவமே தனிச்சிறப்பானது. உணர்ந்த மாதிரி தெளிவாகத்தான் இருந்தார், கார்த்திகேயன். அவரின் மனைவிதான் இனம் புரியாத குழப்பத்திலிருந்தாள். புதிய வீட்டில் சாமான்களை ஆங்காங்கே எடுத்து வைத்தபடியே கவனித்தவர் மெல்ல அவளருகே போய் ‘நானிருக்கேமா…’ என்பதாக இடது தோள்ப்பற்றினார், அந்த •பரிசம் பிடித்தாற்போல் தன்கையை சேர்த்துக் கொண்டாள்.அவள், கண்கள் சின்னதாய் கலங்கியது. “பத்மா எதுவுமே காயமில்லை. நாட்களின் நகர்வு அனைத்தையும் ஆற்றிவிடும்னு மனச தேத்திக்கனும். இது மாதிரிலாம் நடக்கும்னு முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா


கல்யாணக் குருவி

 

  சற்றுமுன் வரை தன்னில் அலங்காரமாயிருந்த அத்தனையும் மெத்தையில் கலைந்து கிடந்தது.சுடிதாருக்கு மாறினாள். இது எத்தனையாவது அலங்காரம்?அவளுக்கே ஞாபகமில்லை. மனமெங்கும் குமுறல், அழுகையாக உருவெடுக்கும் முன் நிதானத்தை பற்றிக் கொள்ளனும் என்று எண்ணியவாறே துண்டை எடுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தாள் சுபத்ரா. சுபத்ரா,சாமுத்ரிகா லட்சணம் பொறுந்திய பெண்தான்…திருமணக்கொழு, மணவரை மாடத்தில் யாரும் அமர வைக்காத பொம்மையாகி விட்டாளே…அதுதான் வருத்தமளிக்கிறது. நாட்களின் நகர்வில் வயதின்அளவு நீள்கிறது இதை, அவள் நினைக்கவில்லைதான். இதோ முகம் கழுவி துடைத்தவாறே வந்து விட்டாள்.


வெளியேறிச் செல்லும் மகன்

 

  வீடு அமைதியாக இருந்ததிலிருந்தே அப்பா வந்திருக்கிறார் என்பத தெரிந்து கொண்டான்,கணேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கார். “ம்…என்ன கோரிக்கையோ ?” இன்று கடைசி வெள்ளி ,மாலையில் மனைவியைக் கூட்டிக்கொண்டு கோயிலுக்குப்போகலாம், அப்படியே பர்மாக் கடையில் டிபன் செய்யலாம்னு மனசுக்குள் போட்ட திட்டம் சட்டென திவாலாகிப்போனது. வராண்டாவில் செருப்புகளைக் கழட்டி விடும்போதே, “இன்னும் காணலேன்னு நெனச்சேன் வந்துட்ட கணேசா. உனக்கு ஆயுசு கெட்டிப்பா.” வழக்கமான பானியில்,அப்பா. அடுத்த நிலையின் மனைவியோட காட்டமான செயல்கள் தன்னுள் நிழலாடினாலும்…பொய்யாக