கதையாசிரியர் தொகுப்பு: பாரதிபாலன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஒளியும் ஒலியும்

 

 “” என்ன கௌம்பீட்டியளாக்கும்?” “”போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.” “”தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ… இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.” “”இது பெரிய கேதமில்லையா… அதெல்லாம் பார்க்கமுடியுமா அப்புறம் எப்பப் போயிக் கேப்பீயாம்? ஒரு மாசம் ஓடிடுச்சு. காரியத்துக்கும் போகத் தோதுப்படலெ…” “”நல்ல சாவுதானே?” “”ம். என் ஜோட்டு ஆளுதான்.” “”எல்லாம் நம்ம கையிலயா இருக்கு, கூப்பிட்டா போகவேண்டியதுதேன்.” “”அது உள்ளதுதேன்.” “”புள்ள குட்டிகளுக்குக் கல்யாணம் முடிச்சாச்சா?” “”ம்! எல்லாம் தல எடுத்துடுச்சுக. ஒரு கொறையும் இல்லெ. இங்க


சனிக்கிழமை சாயங்காலம்

 

  நடப்பது எதுவும் உவப்பாகவே இல்லை. என்னைப் புரிந்துகொள்ளாமல் அவள் அந்த நிர்மலா என்னைப் புறக்கணிப்பதாகவே உணர்கிறேன். ‘நிர்மலா யார்? எதன்பொருட்டு என்னோடு உறவாடுகிறாள்? அவளுக்கும் எனக்குமான ஆதித் தொடர்பு என்ன?’ என்றெல்லாம் ஆராயும் அவசியமே இல்லை. விடை எளிது. அவள் என்னுடன் ‘தி மியாமி சொல்யூஷன்’ நிறுவனத்தில் வேலையாக இருக்கிறாள். சாப்ட்வேர் இன்ஜினீயர். என் நாற்காலியிலிருந்து மூன்று முழத் தொலைவு! நிர்மலா என் விஷயத்தில் அத்துமீறி நுழைந்து விட்டாள் என்று குற்றம்சாட்ட முடியவில்லை. ஒருவிதத்தில் நானும்


நிலம்

 

 மாசானமுத்துவுக்கு நிற்க முடியவில்லை. வெயில் வெள்ளையாக எரிந்துகொண்டு இருந்தது. ஊமை வெயில். உடம்பெல்லாம் ஊறியது. உடல் இடுக்குகளில் எல்லாம் ஈரம் மிதந்தது. கால் கடுக்கும்போது, காலை மாற்றிப்போட்டு நிற்பான். அடிக்கொரு தரம் உடலைச் சற்று இப்பாலும் அப்பாலும் நீட்டி, வளைத்துச் சோம்பல் முறிப்பான். காலை நீட்டி உதற வேண்டும் போல் இருக்கும். வெகு நேரம் இந்த வரிசையில் நின்றிருப்பதால், சற்று விலகி எங்காவது போய் உட்கார்ந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது! மலைப் பாம்பு போல நீண்டு கிடந்தது