கதையாசிரியர் தொகுப்பு: பாரதிதம்பி

11 கதைகள் கிடைத்துள்ளன.

காதலும் தோழரும் பின்ன மார்க்ஸும்!

 

 ”தோழர், காதலிக்கிறதுன்னா என்னா பண்ணணும்?”- இரண்டாம் ஜாமத் தூக்கத்தில் இருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பைவிட, அந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்ததுதான் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. ”ம்… குவாட்டர் அடிச்சுட்டுக் குப்புறடிச்சுத் தூங்கணும்” என்ற என் பதிலை அவன் ரசிக்கவில்லை. ”தோழர், உங்களை வெவரம்னு நினைச்சுத்தானே இதைக் கேக்கேன். நீங்கபாட்டுக்கும் நக்கல் பண்ணுதியளே.” ”எல! நான் சொன்னனா, நான் வெவரம்னு. உம்பாட்டுக்கும் நெனச்சுக்கிட்டா, அதுக்கு நானாடே பொறுப்பு?” ”சும்மா சொல்லுங்க தோழர். காதலிக்கிறவங்க என்னல்லாம்