கதையாசிரியர் தொகுப்பு: பாரதிதம்பி

6 கதைகள் கிடைத்துள்ளன.

திட்டம்

 

  SC NO:8 EXT / DAY / BUS STOP ஹீரோயின் மினி பஸ்ஸில் இருந்து இறங்குவது. அதன் மறைவில் இருந்து ஓர் இளைஞன் ஹீரோயினை நோக்கி வேகமாக வருவது. அப்போது ஒரு சைக்கிள் ஒற்றையடிப் பாதையில் இருந்து வருவது. ஹீரோயின் “சுப்பையா… நின்னு” என்பது. சைக்கிளை ஓட்டிச் செல்லும் சுப்பையா ஒரு காலை கீழே ஊன்றியபடி நிற்பது. ஓடிச்சென்று கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டு “ம். சீக்கிரம் போ” என்பது. அவர் பயத்துடன் “என்னம்மா.. நீங்கப்


வூடு

 

  ஜஸ்டினின் பள்ளிக்கூடம் ஜஸ்டின், டீச்சரின் முன்பு கை கட்டி நின்றிருந்தான். அவனது நோட்டு டீச்சரிடம் இருந்தது. ‘டி.ஜஸ்டின் பெர்லின் ராஜ், 3-ம் வகுப்பு, பி- செக்ஷன்’ என நோட்டின் மீது எழுதப்பட்டு இருந்தது. அதன் மீது ஒட்டப்பட்ட லேபிளில் இருந்த பொம்மைக்கு மீசை, தாடி வரைந்து இருந்ததைக் கவனித்தான். டீச்சரின் கையில் இருந்த குச்சி ஜஸ்டினைப் பயமுறுத்தியது. ஆனால், அவன் பயந்த மாதிரி டீச்சர் கடைசி வரைக்கும் லேபிளைப் பார்க்கவும் இல்லை. அதைப்பற்றிக் கேட்கவும் இல்லை.


தீராக் கனவு!

 

  நேற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இந்தப் பின் மதிய நேரம் அதற்கு உகந்ததாக இருந்தது. நிதானமாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, ஜெராக்ஸ் இயந்திரத்தின் மீது கிடந்த தாளை எடுத்து அதற்குரிய இடத்தில் பொருத்தினான். தொலைபேசிகளை ஒழுங்குசெய்துவிட்டு, கால்களில் புண் இருந்த பகுதி நாற்காலியில் படாதவாறு மடக்கி உள்ளே வைத்துக் கொண்டு சாவகாசமாக இரண்டாவது கனவுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டான். நீண்டு


காதலற்றவனும் காதலுற்றவளும் !

 

  கலையரசன்… ஒரு காதல் காமன்மேன். என்னை மாதிரி எவனாவது சிக்கினால் ஆவேச அறிவுரைகள் வழங்கித் தாளிப்பான். பன்னெடுங்காலமாய் இந்தப் பன்னாடை வழங்கி வரும் காதல் உபதேசம் தற்சமயம் பட்டு நூல்காரத் தெருவின் அறையைத் தாண்டி, தஞ்சாவூரின் வீதிகளில் வழிந்துகொண்டு இருக்கிறது. “மச்சான், அது எப்படி ஒரு மனுஷனுக்குக் காதல் வராம இருக்கும்? மண்வாசனை இல்ல, மண்வாசனை… அது இந்தப் பூமிலதான்டா இருக்குது. ஆனா, அதை வெளிய கொண்டுவர வானத்துலேர்ந்து மழை வர வேண்டியிருக்கு. அந்த மாதிரிதான்


போதை ஞானப் புத்தன்

 

  ”நல்லா கேட்டுக்கடே… இப்படியே மேக்கப் பாத்துப் போனியன்னா, கேட்டு வரும். உம்பாட்டுக்கு ‘குருவி’ விஜய் மாறிக்கே பறந்து ரயிலுக்குள்ள பூந்து போயிடலாம்னு ஓடாத. பொறுத்துப் போ! தாண்டி பீச்சாங்கைப் பக்கம் திரும்பி நேராப் போனியன்னா, அந்தச் சாலை குறுக்குத் துறையிலக் கொண்டுவிடும். அங்கதான் அவ குளிச்சுக் கிட்டிருப்பா. உன் தொரட்டிக் கண்ணை வெச்சுத் தூண்டி போடாம, மூஞ்சைப் பொத்திக்கிட்டு குடுத்துட்டுத் திரும்பிப் பார்க்காம ஓடியாந்திரணும். வெளங்கு தாடே?” குதூகலம் நிரம்பிய குரலில், ஒருவித பெருமித மின்னல்