கதையாசிரியர் தொகுப்பு: பாமா

10 கதைகள் கிடைத்துள்ளன.

விட்டு விடுதலையாகி…

 

  “குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்”னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்”னு சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு யாருக்குத் தெரியும்? என்னைக்காவது பேருச் சொல்லிக் கூப்புட்டுருந்தா நமக்குத் தெரியும். அவனோட அம்மையும் அய்யனுமே அவன ஒரு நாளும் பேருச் சொல்லிக் கூப்புட்டு யாரும் கேட்டதில்ல. இப்ப என்னமோ புதுசாப் பேரு சொல்லிக் கூப்புடச் சொல்றா.”


சிதறல்கள்

 

  மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் பிரதான சாலையில் மாத்தூர் அமைந்திருந்தது. கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட சிறுவர்கள், அந்தப் பள்ளியில் இருந்தார்கள். சந்திரனும் அவர்களில் ஒருவன். எடையபட்டிதான் அவனது சொந்த ஊர். சீர்திருத்த பள்ளிக்கு வந்து


அண்ணாச்சி

 

  ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித் தறுதலையா வந்து வாச்சிருக்கே, ‘ கோவமும் சலிப்புமாச் சொல்லிக்கிட்டு இருந்த மாடத்தியத் தடுத்துட்டு முத்து ரத்துனம் மேல சொன்னா. ‘அதானடி… அந்த வீட்டுப் பிள்ளைக பூராம் இப்பிடித்தான் இருக்குதுக மித்ததுகளையாவது ஒரு வழில சேத்துரலாம். ஆனா இவெ இருக்கானே.. அதான் இந்த அம்மாசிப் பெய, இவன எட்டுலயுஞ் சேக்க முடியாது. எழவுலயுஞ் சேக்க முடியாது.


நிழலும் நிஐமும்

 

  வருடத்திற்கு இரண்டு முறைதான் நாங்கள் புதிதாக துணி எடுத்துத் தைப்போம். ஒன்று கிறிஸ்து பிறப்புத் திருவிழாவுக்கு. இன்னொன்று எங்கள் ஊர் மாதா திருவிழாவுக்கு. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்கு மதுரைக்குச் சென்று துணிமணி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நானும், என் மனைவியும் பத்து மணிக்கு வரும் வாய்தா வண்டியில் மதுரைக்குப் புறப்பட்டோம். அந்தப் பேருந்தில்தான் மதுரைக் கோர்ட்டுக்கு வாய்தாவுக்குச் செல்பவர்கள் வழக்கமாகச் செல்வார்கள். அதனாலேயே அந்தப் பேருந்துக்;கு வாய்தா வணடி


உண(ர்)வு

 

  அன்னிக்குச் சனிக் கெழம! ஆனந்துக்கு ரொம்பச் சந்தோசமா இருந்துச்சு. அதுலயும் அவனுக்கு லீவு, அவகம்மாவுக்குப் பள்ளிக்கூடம்னு சொன்னது அவனுக்கு ரெட்டிப்புச் சந்தோசமா இருந்துச்சு. அவுகம்மாவ அவனுக்குப் புடிக்காதுன்னு சொல்ல முடியாது. ஆனா அவுங்க, அவனோட விசயத்துல செய்ற கெடுபுடித்தனம் அவனுக்குக் கொஞ்சங்கூடப் புடிக்காது. ஆனந்துக்கு நாலு வயசு. உள்ளூர்ல இங்கிலீசு மீடியம் பள்ளிக்கூடம் இல்லாததுனால பக்கத்து ஊர்ல இருக்குற காமாட்சி இந்து கான்வெட்டு ஸ்கூல்ல யூ.கே.ஜி படிக்கிறான். எல்.கே.ஜி படிக்கும்போது, பள்ளிக்கூடத்துக்குப் போவ மாட்டேன்னு காலைல