கதையாசிரியர் தொகுப்பு: பாமா கோபாலன்

1 கதை கிடைத்துள்ளன.

ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை

 

  நாளைக்கு மீட்டிங்கில் பேச வேண்டும்.எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. நகம், பல் மற்றும் பக்கோடாவைக் கடித்தவாறு யோசித்துக் கொண்டிருந்தேன்.யோசிக்க விடாமல் பக்கத்து வீட்டுக்குப் புதுசாய்க் குடி வரப்போகிற குடும்பத்தின் உடைமைகள் லாரியில் வந்திறங்கிய சத்தம். சாமான்கள் இறங்க ஆரம்பித்தவுடனேயே ஜன்னல் பக்கத்திலிருந்து பார்த்தவாறு பக்கவாத்தியம்போல் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாள் என் பெண்டாட்டி. மூன்று கட்டில்கள், இரண்டு ஃப்ரிஜ்கள் என்று ஏகப்பட்ட பொருட்களாம். மூன்று பேர் காரில் இறங்கியதற்கு இத்தனை சாமான்கள் அதிகமாம். குட்டி யானை போதுமாம்.