Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: பவித்ரா நந்தகுமார்

5 கதைகள் கிடைத்துள்ளன.

பசுமைத் தாம்பூலம்

 

  தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை கனகப்பிரியா திருமண மண்டபம் நிரஞ்சன் – அர்ச்சனா வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தன்னை அத்தனை சிறப்பாய் அலங்கரித்துக் கொண்டிருந்தது. மண்டப முகப்பில் இருபுறமும் குலை தள்ளிய வாழை மரம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பெரிதாய் இருந்தது. அந்தச் சாலை முழுதும் மணமக்களை வாழ்த்தும் விதவிதமான வாழ்த்து கணப்புத் திரைகள் (பேனர்கள்). திரை நட்சத்திரங்களுக்கே சவால்விடும் வித்தியாசக்


48-ஆவது பெண்

 

  மகேஷுக்கு பெண் பார்க்கப் போவது என்றால் திருநெல்வேலி அல்வாவைச் சுடச்சுட சாப்பிடுவதுபோல அவ்வளவு பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு திருவிழா கொண்டாட்டத்திற்குத் தயாராகும் உற்சாகம் தாண்டவமாடும். மனசுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத பறவை ரெக்கை கட்டி வட்டமடிக்கும். சரி, கல்யாணம் கட்டிக் கொள்ளத்தான் அலைகிறான் என்று நீங்கள் நினைத்தால், அது தப்புக்கணக்கு. நாலாவதோ, ஐந்தாவதோ அல்ல நாற்பத்தெட்டாவது முறையாக பெண் பார்க்கும் வைபவமாக இன்று சீஷமங்கலத்தை நோக்கிய பயணம். “இவர்தான் மாப்பிள்ளை, இவர்தான் மாப்பிள்ளை’ என்று பிறர்


சிறகு உதிர் காலம்!

 

  வாடிப் போன கத்திரிச் செடியாய் வந்திறங்கிய ஆதித்யாவிற்கு வாசலில் இருந்த புது ஜோடி செருப்பு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. யாராவது விருந்தாளி வந்தார்கள் எனில் விதவிதமான இனிப்புகள், பலகாரங்கள் உண்ணக் கிடைக்குமே… அந்த உற்சாகம். பூஜையறை அலமாரியில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த வகை பலகாரங்களை இரண்டு நாட்கள் வைத்திருந்து உண்ணலாம். எதிர்பார்ப்போடு உள்ளே நுழைந்தான். தன் அம்மா பக்கத்தில் ஒரு புது ஆன்ட்டி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். ஊதா நிற சுடிதாருக்கு இணையாக ஊதா நிறத்திலான


சண்முகம் மாமா

 

  “”என்னங்க, நியூஸ் கேட்டதுலருந்து என்ன நீங்க பேயறைஞ்சா மாதிரி ஆயிட்டீங்க. உங்க மாமா டெத்துக்கு எப்ப போறதுன்னு சொல்லுங்க…” புடவை கொசுவத்தை சரிசெய்தபடியே கேட்டாள் சுதா. “”அதான் எனக்கும் ஒண்ணும் புரியல சுதா. சாதாரண நாளா இருந்தா கூட பரவாயில்ல. ஒருநாள் வியாபாரம் ஒழிஞ்சு போவட்டும்னு கடைய பூட்டிட்டு கிளம்பிரலாம். ஆறு மாசமா தள்ளிப் போயிட்டே இருக்கிற விஷயம்… இன்னிக்குத்தான் ஒரு முடிவு ஏற்படும்னு நம்பிக்கிட்டிருக்கேன். அந்த சேட்டு வேற ராஜஸ்தான்லருந்து மூணு வாரம் கழிச்சு


கார்த்திக்கின் காதல் கடிதம்

 

  சூடான கிரீன் டீயைப் பருகியபடியே தன் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த கட்டு பைல்களை மேய்ந்து கொண்டிருந்தான் கார்த்திக். ரீனா கதவை திறந்து கொண்டு வருவது கண்ணாடியில் தெரிய, சுழல் நாற்காலியில் சுழன்று அவளுக்கு குட் மார்னிங் சொன்னான். “”என்ன குட்மார்னிங்… வெரி பேட் மார்னிங் டு மீ” “”ஹேய்… வாட் ஹேப்பன் மா”. “”கார்த்திக்… காலையிலிருந்து உன் மொபைலுக்கு டிரை பண்றேன். ரெஸ்பான்úஸ இல்ல. சரி நீ ஏதாவது கோல்மால் பண்ணி ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருப்பனுதான்