Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: பவித்ரன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

சரியான இளிச்சவாயன் ….

 

  ‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம், வேறென்ன செய்வது போய்தானாகாணும், ஏ. சி மெக்கனிக்னா சில்லுனே இருக்குமா, உழைச்சு வியர்வை நாத்தம் வந்தா தான் சாம்பார் வாசனைய நுகர முடியும்’. “ஹலோ …ஹலோ சார்.. கூப்டே இருக்கன்.. எங்கயோ யோசனையா இருக்கீங்க, சரி… எவளோ லிட்டர் ” ” ஏதோ ஞாபகத்தில இருந்துட்டேன்… ஒரு லிட்டர் போடு பா”. “ஆறு மனமே


நான், போலீஸ் மற்றும் பழ வண்டி எங்களோடு ராஜா சார் !!!

 

  நீல வானம், ஆங்காங்கே வெண்ணைத் தடவினார் போல் வெண் மேகங்கள், 9 மணியை 11 மணியாக மாற்றி தன் வேலையை மிக செம்மையாக செய்த சூரியன், கானல் நீரை தெளிக்க, நான் இரும்புப்பாதையைக் கடந்தேன். இருபுறமும் பார்த்து கடந்து நடைமேடையைச் சேர்ந்தால், இது எதாவது பேரணியா ? இல்லை போராட்டமா ? என என்னும் அளவிற்கு கூட்டம். நானும் அதில் வியர்வை வழிந்து கூட்டத்தில் வழிந்தேன். “ச்ச.. 15 நிமிஷம் தூக்கத்த தியாகம் பண்ணி இருந்தா,இந்த


கல்யாணமும் காட்சியும்

 

  வாடிநக்கையின் சஞ்சாரத்தில் ஒளியாடீநு கைக் கோர்த்து நகர்வது சுகம் தான். அதுவும் தலைவனின் கண்ணாக தலைவியும், தலைவியின் மனதாக தலைவனும் இருந்தா வழியெங்கும் முட்கள் கூட மலராகும். இன்ப துன்பங்களில் ஒன் பை டூ என்ற முழுமையான பந்தம் தான் திருமணம். என்றுமே ரசம் போகாத வாடிநக்கைக் கண்ணாடியில் பிம்பங்களாக, பேரன்பின் பெயர்களாக, “கணவன் – மனைவி”அவர்களின் விட்டுக் கொடுத்தல் தான் மகத்துவம். ஆரோக்கியமான நாட்கள் காலண்டரையும் தாண்டும். இந்தக் கதையில் வரும் கணவனும் மனைவியும்


எழில்

 

  அது காலை வேளை, சுமார் 8.00 மணி இருக்கும் கதிரவன் எல்லாவிடத்திலும் படர, பரபரப்பான காலையாக இருந்தது. அழுக்கு மூட்டையோடு பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களைத் திரட்டிக்கொண்டு ஒரு உருவம், டீ கடைவாசலில் பால் கவர்களுக்காகவும், யாராவது டீ வாங்கிக் கொடுப்பார்களா! என ஏங்கியது தெளிவாக தெரிந்தது. “டேய் தண்ணீ எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன், ஓடிடு” என்றான் டீ கடை மாஸ்டர். “மாஸ்டர் அவருக்கு ஒரு டீ கொடுங்க, காசு நான் தரேன்” என்றார் ஒரு


முதிர்வின் உணர்வு

 

  அதிகாலை 4.30 மணி குளிர் காகங்களை பாடவைக்க, நாளிதடிந இணைப்பை தெருவில் சிறுவன் சேர்க்க, நட்சத்திரங்கள் சூரியன் வருகைக்காக காத்துக் கிடக்க, இந்தப் பரபரப்பும் இயற்கையின் மெய் ஞானமும் நமது மப்லர் கழுத்துக்காரரை மெதுவாக சைக்கிளை மிதிக்க வைத்தது. குறைக்கும் நாய்களுக்கு பயத்தில் பெல் அடித்து தன் கைகளையும், கால்களையும், மனசையும் பிசியாக வைத்துக் கொண்டு ஒரு முதிர்ந்த குழந்தை டீக்கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. டீ கடைக்கு வந்து சேர்ந்த அந்த சைக்கிள் ஜெட்