கதையாசிரியர் தொகுப்பு: பவள சங்கரி

19 கதைகள் கிடைத்துள்ளன.

மரியாதைக்குரிய களவாணிகள்!

 

  நிசப்தமான வீதி. மதியம் 3 மணி. அக்னி நட்சத்திரம் தகிக்கும் காலம். மக்கள் வெளியே வரவே அஞ்சும் வெப்பம்.. கோவையிலிருந்து ஈரோடு வழியாக நாமக்கல் செல்லும் பாதையில் ஒளப்பம்பாளையம் என்கிற உலகப்பம்பாளையம் செல்கிற மண் சாலை கிட்டத்தட்ட பொட்டல் காடு எனலாம். காருக்குள்ளும், புழுக்கம்தான். மனதிற்குள் இருக்கும் புழுக்கம், கணவன் ,மனைவி இருவரின் பெருமூச்சும் சேர்ந்து உஷ்ணம் தகிக்க ஆரம்பித்து விட்டது. குளிரூட்டப்பட்ட காரிலேயே பயணம் செய்து பழகிப்போன உடல் இந்த கடும் வெப்பத்தைத் தாங்குவது


இது…இது… இதானே அரசியல்!

 

  ”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?” “கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு… அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல… இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு


கருணையினால் அல்ல…..!

 

  ”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ… எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா” அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா


ஆகாயத்தாமரை!

 

  ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், மங்கலான முகங்களுடன்…… “ஏண்டி பாவி, இப்படி அல்பாயுசுல போயிட்டியேடி.. நன்னாத்தானே இருக்கேன்னு நினைச்சுண்டிருந்தேனே.. இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.. தற்கொலை பண்ணிண்டு உயிரை மாய்ச்சுக்கற அளவுக்கு நோக்கு என்னடி பிரச்சனை. என்னண்ட


வசந்தமே வருக!

 

  சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க க்ளையண்ட்டான ஜேம்ஸ் வேறு என்ன செய்ய முடியும். இது போன்ற பெயரை முன்பின் கேட்டதும் இல்லை, உச்சரிப்பதும் எளிதும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி, எஸ் ஃபார் சேம்ஸ் (s for sams, u for umbrella,