கதையாசிரியர் தொகுப்பு: பட்டுக்கோட்டை ராஜேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

அந்திமக் கால ஆதரவு

 

  “”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா… இன்னொருத்தராலே கவனித்துப் பார்க்க முடியுமா? ஆகையாலே நாங்க சொல்றதைக் கேளுங்க” என அடிக்கடி எங்களது இரண்டு மகன்களும் வற்புறுத்திச் சொல்லுவார்கள். எனக்கு வயது அறுபத்தெட்டு ஆகிறது. என் மனைவி சீதாவிற்கு அறுபத்தைந்து. இரண்டு மகன்களும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் எஞ்சீனியராக வேலை பார்க்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகளுடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்க விருப்பமில்லாமல், “”தனியாகவே