Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: படுதலம் சுகுமாரன்

14 கதைகள் கிடைத்துள்ளன.

கொண்டாடினால் தப்பில்லை!

 

  காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு என்ன விசேஷம்… அமாவாசையா, கிருத்திகையா, வேறெதுவுமா என்று கண்களை கசக்கும் போதே, எதிரே கற்பூர ஆரத்தியுடன் நின்றாள் மனைவி அருணா. ஆரத்தியை தொட்டு என் கண்களில் ஒற்றி, “”சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. கீசர் போட்டு வச்சுட்டேன்; தண்ணி சுட்டிருக்கும். புதுசு கட்டிக்கிட்டு கோவிலுக்கு போகணும். சித்தி விநாயகருக்கு அபிஷேகத்துக்கு சொல்லியிருக்கு. அப்படியே பாபுஜி முதியோர்


தலைகீழ் வாழ்க்கை!

 

  “”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று கேட்டான். சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது. சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. “”காரணம் சொன்னால் தான் செய்வியோ?” என்று சீறினான். “”ஏன் கோபப்படறீங்க… நானும் இந்த வீட்டைச் சேர்ந்தவன். காரணம் தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு?” “”எதிர்த்து பேசாம சொன்னதை செய்டா. இப்பவே குடும்பத் தலைவனாக நினைக்காதே.” “”அடக் கடவுளே…


நில்-கவனி-செல்!

 

  ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி. பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம். என்றாலும், ராஜினாமா கடிதத்தை முடிக்க விடாமல், அவனை மீண்டும், மீண்டும் தடுத்து, அந்த கடிதத்தை பிடுங்கிக் கொண்டவர், “”என் கூட வா…” என்று வெளியில் அழைத்தார். “”வெளியில் போகத்தான் போகிறேன்; இனி, ஒரு நிமிஷம் இங்கே நின்றால், நான் மானமுள்ள மனுஷனில்லை. இங்க எழுத விடலைன்னாலும், வெளியிலிருந்து லெட்டர் எழுதியனுப்ப முடியாதா என்ன?” என்ற


பீனிக்ஸ் பறவைகள்!

 

  “”காலையிலேயே பிரச்னை… மோட்டார் தண்ணீர் எடுக்கலைங்க.” “”சுவிட்ச் சரியாக போட்டியா?” “”புதுசா போடறாப்ல கேட்கறீங்க. வேணும்ன்னா நீங்கதான் போட்டு பார்க்கறது.” நான் போய் சுவிட்ச் போட்டேன். மோட்டாரில் வினோதமான ஓசை கேட்டது; தண்ணீர் ஏறவில்லை. இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தபின், உள்ளே திரும்பினேன். “”மேல் தொட்டியில கொஞ்சமாவது தண்ணீர் இருக்கா?” “”இல்லை…” “”முதல் நாளே நிறைச்சு வச்சுக்கறதில்லையா?” “”மோட்டார் இப்படி கழுத்தறுக்கும்ன்னு எனக்கென்ன தெரியும். முன் யோசனையா கிணறு வெட்டி இருந்தால், இந்த மாதிரி


முள்செடி

 

  அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், கருணாகரன். “”அப்பா…” தயங்கி, தயங்கி அருகில் வந்தான் பாபு. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “”ம்…” என உருமினான், கருணாகரன். சமீப நாட்களாக, வீட்டில் குழந்தைகள் உட்பட யாரிடமும் சரிவர பேசுவது கிடையாது. “”நான் ஒண்ணு கேட்கலாமா?” “”என்ன கேட்கப் போற…” குரலின் கடுமை, பாபுவை பின்னடைய வைத்தது; ஆனாலும் கேட்டான்… “”நீ விஸ்கி சாப்பிட்டியாப்பா?” சுரீரென்று முள் குத்தியது. திரும்பி குனிந்து, பாபுவின் தோள்களை அழுத்திப் பிடித்து, “”உங்க அம்மா கேட்கச்