கதையாசிரியர் தொகுப்பு: பஞ்சதந்திர கதைகள்

17 கதைகள் கிடைத்துள்ளன.

முட்டாளுக்கு புத்தி சொன்னால்?

 

  ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று


வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

 

  ஒரு நாட்டில் தந்திலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். தந்திலன் செல்வச் செழுமையும், சிறந்த அறிவும், நல்ல தகுதியும் பெற்றவனாக இருந்தான். மக்களிடமும் அவனுக்கு நன்மதிப்பு இருந்தது. அந்த நாட்டின் மன்னரிடம் நல்ல செல்வாக்கையும், பேராதரவையும் பெற்ற அவன் மன்னருடைய கருவூலத்துக்கும் அதிகாரியாக இருந்தான். ஒரு நாள் தந்திலன் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினான். திருமணத்துக்கு மன்னரும் – அரசியாரும் முக்கிய விருந்தினராக வந்து சிறப்பித்தனர். தந்திலனின் அழைப்பை ஏற்று அரசாங்க அதிகாரிகளும்,


இரண்யகன் வரலாறு

 

  சீரும், சிறப்பும், வளமும் நிறைந்த ஒர் ஊர் உண்டு. ஊரின் வட எல்லையிலே பெரிய சிவன் கோயில் ஒன்று. இருக்கின்றது. அந்தக் கோயிலை ஒட்டி கோயிலின் ஒர் அங்கம் போல மடம் ஒன்று அமைந்திருக்கின்றது. அந்த மடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு பூடகர்ணன் என்ற ஒரு சன்யாசி வாழ்ந்து வந்தான். அந்த மடத்திலே ஒரு பக்கமாக இருந்த பெரிய வளையிலே இரண்யகன் என்ற சுண்டெலி தனது பரிவாரங்களுடன் வசித்து வந்தது. பூடகர்ணன் அன்றாடம் உணவு நேரத்தில்


உண்மையான நண்பர்கள்

 

  பெரிய காடு உண்டு. அந்தக் காட்டிலிருந்த ஒரு மரத்தின் கிளையில் ஆணும் பெண்ணுமான இரண்டு குருவிகள் கூடுகட்டிக் குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தன. பெண் குருவி, கூட்டில் பல முட்டைகளை இட்டு வைத்திருந்தது. ஒருநாள் பகல்நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு பெரிய யானை வந்தது. நிழலுக்காக மரத்தடியில் நின்ற யானை விளையாட்டாகத் தனது துதிக்கையை உயரே தூக்கி துதிக்கைக்க எட்டக்கூடிய மரக்கிளைகளையெல்லாம் ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அவ்வாறு ஒடிந்து விழுந்த கிளைகளில் குருவி கூடு


ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது

 

  சுகபோக வசதிகளில் நாட்டமுடைய ஒரு மன்னன் நிறைய செலவு செய்து தூய்மையும் மென்மையும் நிறைந்த அழகான பஞ்சணை ஒன்று தயார் செய்தான். பஞ்சணை தயார் செய்யப்பட்ட போது ஒரு பெண் சீலைப்பேன் அதில் எப்படியோ ஒட்டிக்கொண்டு பஞ்சணையோடு சேர்ந்து அரண்மனைப் படுக்கையறைக்கு வந்து சேர்ந்துவிட்டது. சீலைப்பேன் எளிதாக மற்றவர்கள் கண்களில் படுவதில்லையாதலால் அன்றாடம் பணியாளர்கள் பஞ்சணையை தட்டிச் சுத்தம் செய்யும் போதுகூட அவர்கள் கண்களில் படாமல் மறைந்து நிரந்தரமாகப் பஞ்சணையிலேயே தங்கிவிட்டது. மன்னனை அயர்ந்த உறங்கும்