கதையாசிரியர் தொகுப்பு: பஞ்சதந்திர கதைகள்

17 கதைகள் கிடைத்துள்ளன.

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

 

  கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான். இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே புலம்பிக் கொண்டான். விடிய விடியத் தூக்கமில்லாமல் படுக்கையில் கிடந்த நெசவாளி, விடிந்து நெடுநேரமாகியும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. காலையில் வேலைக்குப் புறப்பட்ட தச்சன் நண்பனுடைய அறைக்கு வந்தான். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடித் தயாராக இருக்கும் நெசவாளி அன்று அவ்வளவு நேரமாகியும் படுக்கையிலேயே கிடந்தது தச்சனுக்கு பெருவியப்பை அளித்தது. அருகில் நெருங்கி


பேராசையால் உயிரிழந்த கொக்கு

 

  ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது. வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை. அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது. ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது. மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை. அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு


காகக் குடும்பமும் கரும்பாம்புத் தொல்லையும்!

 

  ஓரிடத்தில் விசாலமான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தின் ஒரு காகமும் அதன் பெட்டையும் கூடு கட்டி வாழ்க்கை நடத்தி வந்தன. அந்த ஆலமரத்தின் அடிமரப் பகுதியில் பெரிய பொந்து ஒன்று இருந்தது. அந்தப் பொந்தை ஒரு கரும்பாம்பு உறைவிடமாகக் கொண்டிருந்தது. பெண் காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டுக் குஞ்சுகள் பொறிக்கும். ஆண் காகமும், பெண் காகமும் இரைதேடச் செல்லும் சமயமாகப் பார்த்து பொந்தில் இருக்கும் கருநாகம் மரத்தின் மீது ஏறி காகக் குஞ்சுகளைத்


வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு! தானக சிரிப்பாய்

 

  தெக்க செமதாங்கியில இருந்து வடக்க ஜக்கார்பாளையம் போற இட்டேரி வரைக்கும் ரெண்டு மைல் தூரம், மேக்க வீதம்பட்டி இட்டேரில இருந்து கெழக்க புதூர் போற இட்டேரி வரைக்கும்னு நொம்பப் பெரிய ஊர் வேலூர். மேக்கயே கொஞ்சம் தெக்க சாஞ்சாப்புல போனா வீதம்பட்டி, கொஞ்சம் வடக்க சாஞ்சாப்புல போனா ஜக்கார் பாளையம். கெழக்க சலவநாய்க்கன்பட்டிப் புதூர், கெழக்கயே கொஞ்சம் பக்கவாட்டுல போனா வாகத்தொழுவு, சங்கமநாய்க்கன் பாளையம், அரசூர்னு பல ஊருகளுக்கு நடுவுல சிறப்பா இருக்குற ஊருதான் வேலூர்.


வேஷம் போட்ட கழுதை

 

  ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை. இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான். ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடிப்பதைக் கண்டான். அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது. இந்தப்