கதையாசிரியர் தொகுப்பு: ந.லெட்சுமி

12 கதைகள் கிடைத்துள்ளன.

அனைவருக்கும் சொந்தம்!

 

 முன்னொரு காலத்தில் ஓர் ஆற்றின் கரையில் அத்திமரம் ஒன்று இருந்தது. ஆற்றின் ஓரமாக அது இருந்ததால் மிகவும் செழிப்பாகவும் நிறையக் கிளைகளுடனும் பசுமையான இலைகளுடன், நிறையப் பழங்களைச் சுமந்து கொண்டு நிமிர்ந்து நின்றது. இதன் காரணமாக அம்மரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வசித்தன. கிளிகளும் வெளவால்களும் அத்திப் பழங்களைச் சாப்பிட்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. எந்நேரமும் அம்மரத்தில் பறவைகளின் ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது. மரத்திலிருந்து உதிர்ந்து விழும் பழங்கள் சிறு பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் உணவாகின.


கதை பிறந்த கதை!

 

 முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் கல்வியை மிகவும் வெறுத்தனர். இளவரசர்களுக்குரிய எந்தத் தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் சதாசர்வ காலமும் விருந்து, கேளிக்கை, வேடிக்கை, விளையாட்டு எனக் காலம் கழித்தனர். பாடம் கற்றுத் தர வரும் ஆசிரியரையும் கிண்டல் செய்து விரட்டி விட்டனர். இதனால் ஒருவரும் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தர முன் வரவில்லை. இதைக் கண்ணுற்ற மன்னர் சான்றோர்களையும் அறிஞர் பெருமக்களையும் அழைத்து “இந்தப்