கதையாசிரியர் தொகுப்பு: ந.லெட்சுமி

12 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

 

 சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஆசையோடு பார்ப்பாள். எப்படித்தான் இந்தக் குழந்தைகள் ஒரே நாளில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கின்றனவோ? என்று ஆச்சரியப்படுவாள். அவள் மகன் பிரபு ஆறாவது படிக்கும்போது தன் தந்தையின் பெரிய சைக்கிளை எந்தவிதச் சிரமமுமின்றி ஓட்டினான். சந்தான


அங்கம்மாவும், மங்கம்மாவும்

 

 முன்னொரு காலத்தில் “சந்திரபுரி’ என்று ஓர் அழகிய கிராமம் இருந்தது. அங்கு செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய பண்ணை வீடு அமைத்து அதில் பசு, காளை, நாய், குதிரை, ஆடு, கோழி எனப் பல வீட்டு விலங்குகளை வளர்த்து வந்தார். அப்பண்ணையில் இருந்த விலங்குகள் யாவும் ஒரே குடும்பம் போல் பழகி வந்தன. இந்நிலையில் அச் செல்வந்தர் பொதி சுமக்க இருபது கழுதைகளைப் பக்கத்து ஊரிலிருந்து வாங்கி வந்தார். இதுவரை கழுதைகளையே பார்த்திராத அவ்விலங்குகள் அவற்றிடம் பேச விரும்பவில்லை.


பலவீனமே பலம்

 

 முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் புத்த மதத் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பல தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கினார். அந்நாட்களில் மனதை ஒருமுகப்படுத்த புத்த மதத் துறவிகள் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தி வந்தனர். மன்னரின் படையில் சேர்வதற்குத் தற்காப்புக் கலைகளை அறிந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் பல இளைஞர்களும் அத்துறவியிடம் தற்காப்புக் கலைகளைப் பயின்றுவந்தனர். இப்படிஇருக்கையில் ஒருநாள் “ஹைக்கோ’ என்ற பெயருடைய ஒருவன் தான் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகத் துறவியிடம் கூறி


வதந் “தீ”

 

 அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை வாயிலை ஒட்டிய சுவரில் மறுபக்கம் ஒரு படைவீரன் மற்றொரு படை வீரனுடன் பேசுவது அவள் காதில் கேட்டது. “”நான் இன்று இரவு அரசருக்குத் தெரியாமல் பஞ்ச கல்யாணியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்லப் போகிறேன்..” என்றான். அதற்கு மற்றொருவன் “”அரசனுக்குத் தெரிந்தால் உன் நிலை என்னாகும் தெரியுமா? மரண தண்டனைதான்!” என்றான். அந்நாட்டு மன்னரின் அரண்மனையில்


இல்லாத திருடனைப் பிடித்த கதை

 

 முன்னொரு காலத்தில் “ஓஹோ ராமன்’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி “ஓஹோ’ என்று புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்ததாலும் அவ்வூரில் மேலும் பலர் ராமன் என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாலும் அவ்வூர் மக்கள் அடையாளத்துக்காக அவனை “ஓஹோ ராமன்’ என அழைத்து வந்தனர். ஓஹோ ராமன் அரண்மனையில் சமையல் வேலை, குதிரைலாய வேலை, பாத்திரம் கழுவுதல், துணிகளைத் துவைத்தல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா எடுபிடி வேலைகளைச் செய்து வந்தான். ஆனால்