கதையாசிரியர் தொகுப்பு: ந.முத்துசாமி

2 கதைகள் கிடைத்துள்ளன.

இழப்பு

 

  தன் நண்பர்களைக் கொல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. ஏன் அப்படித் தோன்றிற்று என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒருநாள் மாலை பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் தன் நண்பர்களோடு போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று இப்படித் தோன்றிற்று. 13-ஆம் நம்பர் பஸ் தன்னைக் கடந்து போனபோது நண்பர்களை ஒவ்வொருவராக சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டுமென்று தோன்றிற்று. புருவத்தை உயர்த்தி ஏன் என கேட்டுக்கொண்டான். நினைப்பை மனதில் அழுத்தி அழித்துவிட வேண்டுமென்று கண்ணை இறுக மூடிக்கொண்டான். சின்னப்பையனாகக் கிராமத்தில் கும்பியில் கால் வைத்து அழுத்தும்


கல்யாணி

 

  என் பேத்தி ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். காலை நேரம். புஞ்சையிலிருந்து தொலைபேசியில் செய்தி வந்தது. ‘கல்யாணி இறந்துவிட்டார். நேற்று இரவு இறந்துபோனார். இன்று பிற்பகல் எடுக்கிறார்கள்’ என்றார், தொலை பேசியில் பேசியவர். ‘நீங்கள் யார் பேசுவது?’ என்று நான் கேட்டேன். ‘நான் நரசிம்மனின் மகன்’ என்றார் அவர். எந்த நரசிம்மன்? எனக்கு நிறைய நரசிம்மன்கள் பழகியிருந்தார்கள், கூத்தில் உள்ள நரசிம்மனையும் சேர்த்து. கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. அவருடைய தங்கையைக்