Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: நோர்வே நக்கீரா

5 கதைகள் கிடைத்துள்ளன.

சிறைக்குள் எரிந்த என்னிதயம்

 

  காலை புலர்ந்தும் அமைதியாகக் கிடக்கிறது ஆறண்டால் நகர். நோர்வேயின் தெற்கே அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. பெருந்தொகை பணத்தில் அங்கே அழகாக அமைக்கப்பட்டிருந்தது ஒரு சிறைச்சாலை. எமக்குச் சிறைச்சாலை என்ற தும் நினைவுக்கு வருவது சித்திரவதைகூடங்கள் தான். பாதுகாப்பு என்பது இல் லாத போது எம்நாடே ஒரு சித்திரவதை கூடமாகத்தானே இருக்கிறது. தெருவில் வைத்து ஒரு இயக்கம் யாரையும் அடிக்கும், சித்திரவதை செய்யும், சுட்டுத்தெரு வில் வீசியெறியும். துப்பாக்கியும் குழுவுமிருந்தால் எதுவும் செய்யலாம் என்றாகி விட்டது


தனிமரம்

 

  அழுதுகொண்டிருக்கிறது பூ. பூ அழுதால் தேன். பாலன் அழுதால் தேவை பால். இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத சோகம்? ஆறுபோல் ஓடுகிறதே கண்ணீர். உருண்டோடும் நீலவிழிகளுக்குள் இத்தனை கண்ணீர் துளிகளா? உறைபனிகாலத்தில் கூட வெப்பத்தால் உறையாத கண்ணீர் நூல்கோத்த முத்தாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது கன்னங்களில். பாடசாலைவிட்டு பலமணி நேரங்களாகியும் அவளை அழைத்துப்போக தாய் தந்தையோ உறவோ தேடிவரவில்லை. அதை குழந்தை எதிர்பாத்திருப்பதாகவும் தெரியவில்லை. காதைக்கடிக்கும் குளிரால் கன்னங்கள் அப்பிள் போல் சிவந்து கிடக்கிறன.


மே

 

  ஐந்துநாளும் வேலை, விடியற்காலை போனால் பின்நேரம்தான் வீடு. சனி ஞாயிறு நின்மதியாக நித்திரை கொள்ளுவோம் என்று நினைத்தால் சடங்கு, சம்பிரதாயம் எண்டு ஏதாவது வந்துவிடும் அவற்றுக்கொன்றே பிறிம்பாக உழைக்கவேணும். செக்கில் கட்டிவிட்டமாடாய் உழன்றாலும் காசாவது மிஞ்சுகிறதா? அதுவும் இல்லை. உழைத்து உழைத்துக் கடனைக்கடியும் கடனாளியாய் சாகவேண்டியதுதான் விதி. மேமாதத்தில்தான் பியொர் எண்ற மரம் இங்கே பூத்துத்தள்ளும். அதன் மகரந்கங்கள் கண்ணைக்கடிக்கும், மூக்கால் வழியும், நெஞ்சு இழுக்கும், கடசியில் குரல்வளையை நெரிக்கும், மூச்சுத்திணறும். இதுதான் என் மே


புலத்தில் ஒருநாள்

 

  “முருகா, அம்மனே, சிவனே, வட்டுவினியானே இந்த பஸ் எல்லாவிடங்களிலையும் நிக்காமல்…யாரும் ஏறாமல்,இறங்காமல் நேரேபோய்; கடசி பஸ்ரொப்பில் நிக்கவேணும். ம்…ம்… இதுக்கிள்ளை யாரே ஒண்டு பெல்லை அடிச்சிட்டுது, இறங்கப்போகுது போலை.  நான் நேரத்துக்குப் போய் சேர்ந்த மாதிரித்தான். சரி இறங்கிறதாவது கதவருகிலுள்ள சீட்டில் இருக்கிறதாக இருக்கவேணும். கடவுளே எம்பெருமானே அப்பதான் பஸ் நின்றவுடனை இறங்கி ஓடலாம்” மணிக்கூட்டைபார்ப்பதும் கடவுளை வேண்டுவதுமாய் கலவரப்பட்டுக் கொண்டே இரு க்கிறாள் ரதி. அவள் நினைத்ததுபோல் ஒரு முதியவர் கதவண்டை ஆசனத் தில்


பசி

 

  எயர்கனடா விமானம் முகில்களை கிழித்துக்கொண்டு உயர உயரப்பறக்கிறது ஆனால் எண்ணங்கள் என்றும் பூமியைச்சுற்றித்தான் வலம்வந்து கொண்டிருக்கிறது. சகோதரங்களை எல்லாம் கனடாவுக்கு அனுப்பும் மட்டும் எந்தவெளிநாட்டையும் நான் எட்டிப்பார்த்ததே கிடையாது. செக்குமாடுபோல் வீடும் வேலையுமாக பதினைத்து வருடங்கள் உருண்டோடி விட்டது. உறவுகள் பற்றிய கனவும், சகோதரங்கைளைக் காணும் துடிப்பும் இப்படி இப்படி எப்படி எப்படியோ எண்ணங்கள் ஏக்கங்கள்…! சாப்பாட்டை எண்ணும் போது சந்திராமாமி தான் கண்முன் நிற்பா. என்ன உணவானாலும் மாமியை வெல்ல யாருமில்லை. ஊரில், கிழமைக்கு