கதையாசிரியர் தொகுப்பு: நெய்வேலி பாரதிக்குமார்

13 கதைகள் கிடைத்துள்ளன.

சுடுநிழல்

 

 புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது. அறிமுகமில்லாதவர்களின் வீடுகள்கூட எனக்கு பெரும்பாலும் அந்நியமாக இருப்பதில்லை, அந்த வீடுகளின் சுவர்களை புகைப்படங்கள் அலங்கரிக்கும் பட்சத்தில்… எதிர்பாராமல் ஆல்பங்கள் கிடைத்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை. ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட உங்களது முகம் ஆல்பத்தில் இருக்கும் என்கிற அனுமானம் இருந்தால் அப்பொழுது


நடுகல்

 

 வளவுக்குள் முதுகு வளைத்து குப்புறவே கிடப்பது செல்லம்மாளுக்கு வலித்தது. தன்னை இறுகப்பற்றியபடி தூங்கும் மாதவியை இழுத்து அணைத்து தலையில் முத்தமிட்டாள். இடுப்பில் கட்டியிருந்த போத்தலிலிருந்து ஓஸ் வழியே தண்ணீரை சிறிது உறிஞ்சிக்கொண்டாள். ரெண்டு நாளாக அவர்களுக்கு தண்ணீர்தான் உணவு. பகலா, இரவா என்று தெரியாமல் இருண்டு கிடந்தது அவர்கள் பதுங்கி கிடந்த குழி. நல்ல வேளை விஷ சர்ப்பம் எதுவும் குழிக்குள் இல்லை. சில சமயம் வெட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வாகாக சர்ப்பம் தங்கி விடும். செல்


உயிர்ச்சுமை

 

 சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது. அவனை அறியாமல் விழிகளில் பொங்கிய நீர் பிரிந்து புரண்டது. வசிப்பிடம்தான் எல்லோருக்கும் இளைப்பாறல்… ஆனால் ஒரு சில சமயம் வீடற்று இருப்பதும் ஒரு சவுகர்யம் என்று தோன்றியது. பற்றற்று இருப்பது பேரானந்தம் என்கிற ஞானமெல்லாம் துயரம் சூழ்ந்து அழுத்துகையில் தோன்றாமலிருக்கிற மனிதர் எவருமில்லை. மணி தன் இறுதி நிமிடங்களை சிரமப்பட்டு நர்த்திக்கொண்டிருக்கிறது. அதன் தீனமான குரைப்பொலி இல்லாத