கதையாசிரியர் தொகுப்பு: நீல பத்மநாபன்

11 கதைகள் கிடைத்துள்ளன.

கடிகாரம்

 

 இரவு முழுதும் தூங்கமுடியாமல் அவன் அவஸ்தைப் பட்டான். இடப்பக்கத்தில் உடம்பில் தோள் பட்டையி லிருந்து கழுத்து, நெஞ்சு, விலா, இடுப்புவரை அசாத்திய வலி. குறிப்பாக மார்புக்குள் பயங்கர வேதனை. சரியாகச் சுவாசம் விடக்கூட முடியவில்லை. உள்ளுக்குள்ளே என்னவோ ஒன்று சுண்டிச் சுண்டி இழுப்பது போல் ஒரு கொடும் நோவு… விழிகளைத் திறக்கும்போது தீயாக எரிந்தது. அப்படி ஜுரம்… அப்பா, ஐயோ என்று ஓலமிட்டுக்கொண்டிருந்தான். கைபட்டால் வேதனை இன்னும் கூடியது. எனிவே தடவ வந்த மனைவி மாலுவை விரட்டியடித்தான்.


சண்டையும் சமாதானமும்

 

 ‘அம்மா…’ மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை. செல்லையா வந்துட்டானா? மாரியம்மையின் விழிகள் கனத்தன. நாலு நாள் பட்டினியின் அசதியும், ஜுரத்தின் களைப்பும் வயோதி கத்தின் தளர்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் அவள் பார்வைக்கு நல்ல தெளிவு இருக்கவில்லை. எனினும் மங்கலாகத் தெரிந்த பரந்த முகமும், இருபக்கங்களிலும் முறுக்கிவிடப்பட்டிருந்த பெரிய மீசையும் அவனை இனம் கண்டுகொள்ள வைத்துவிட்டன. காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் நெற்றியைத் தொட்டுப்


பொருத்தம்

 

 மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில் நின்று கொண்டு செருப்பைக் கழற்றிப் போட்டவாறே, வராந்தாவின் இடப்பக்கம் ஜோஸியர் அருணகிரி வழக்கமாக உட்கார்ந்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தபோது அங்கே அவர் இல்லையென்பது தெரிந்தது. வீட்டினுள் பாத்திரப் பண்டங்கள் உராயும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஓரிரு முறை கனைத்துப் பார்த்தும் யாரும் வெளியில் வரவில்லை. வழக்கத்திற்கு மாறாகக் காலையில் இரண்டு மைல் தூரம் வேகமாய் நடந்ததால் அவனுக்கு


தேடல்

 

 வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ ‘ணங் ‘ ‘ணங் ‘ என்று தட்டும் ஓசை. மணி திடுக்கிட்டுக் கண்விழித்தான். மனசுக்குள் ஒரு எரிச்சல்….இன்றும் நேற்று போல் தானா ? இதென்ன நியூசன்ஸ் ‘ இந்த அகால வேளையில் இப்படி வந்து கதவைத் தட்டி எழுப்பும் அளவுக்கு அவசரக் காரியம் என்னமோ….. ‘ மீண்டும் காரின் ஹாரன். ‘ணங் ‘ ‘ணங் ‘ நெஞ்சின் மீது பாம்பாய்ப் பற்றிக்கிடந்த நிர்மலாவின்


மெளனம்

 

 இன்று எனக்கு மெளன விரதம். இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா ? பின் எதுக்கு இந்த நோன்பு ? நடுக்கூடத்தில் வழவழப்பான தரையில் சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன், மனசின் உள் வெளியில் இன்னதென்று தெரியாது சொரு சொருவென்று நினைவுகள்… நரம்பில்லாத நாக்கின் சுழற்சியில் வெளிப்படும் சப்தங்களுக்குத்தான் என்னவெல்லாம் தொனி விசேஷம். அவை பேசும், கேட்கும் உள்ளங்களில் எழுப்பும் நமைச்சல்கள் உம்…இப்போகூட வாயைத்தான் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடிகிறது….உள்ளம் ? நேர் எதிர்ச்சுவரில் மேலே