Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: நிலாவதனி

5 கதைகள் கிடைத்துள்ளன.

பண்பாடு

 

  “சுஜி.. ஏ சுஜி..நான் சொல்றத கேளும்மா..வீணா அடம்பிடிக்காத.. நீ இப்படி பண்ணினா ,எல்லாரும் என்னதான் சொல்லுவாங்க..பொண்ண வளர்த்துருக்க இலட்சணத்த பாருன்னு..ப்ளீஸ் மா..அம்மா சொல்றத கேளும்மா..” என்று சுஜியை கெஞ்சி கொண்டிருந்தாள் சித்ரா. “முடியாதும்மா போம்மா” என்று மீண்டும் அடத்தை தொடங்கினாள் சுஜி. “ என்னங்க, இங்க வாங்க..வந்து உங்க பொண்ண இந்த புடவையை கட்டிக்க சொல்லுங்க..நான் சொல்ற எதையும் காதுல வாங்கராப்பல இல்ல இவ..எல்லாம் நீங்க குடுக்கற இடம்..என் பேச்சை இவ மதிக்கறதே இல்ல..நீங்களாச்சு உங்க


போகி

 

  “ஹையா..ஜாலி ஜாலி…எனக்குதான் நெக்ஸ்ட் வீக் புல்லா லீவே…ஹேய்ய்ய்ய்…” என்று கூவிக்கொண்டே ஆர்ப்பாட்டத்தோடு உள்ளே வந்தாள் அந்த வீட்டின் குட்டி தேவதை திவ்யா. “பாத்து வாடா..விழுந்திடாத..என்ன திவிக்குட்டிக்கு இவ்வளவு சந்தோஷம்”என்றவாறே தன் காலைக் கட்டிக்கொண்ட பேத்தியைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். “ஹய்யோ பாட்டி, எனக்கு இன்னும் டூ டேஸ் மட்டும் தான் ஸ்கூல்..அப்புறம் ஒன் வீக்…செவென் டேஸ் ஹாலிடே..ஜாலி டே பாட்டி”என்றவாறே பாட்டியையும் சேர்த்து தட்டாமாலை சுற்றத் தொடங்கினாள் திவ்யா. “ஏய்..குட்டி என்ன இது..இப்படிப் பண்ணினா உன்


2013 லவ் ஸ்டோரி

 

  கதைக்குள் செல்லும் முன்… நான் எப்பொழுதுமே அகிம்சை வாதி..காந்தீய வழியில் வாழ்பவள்..சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காதவள்..அடி தடி எல்லாம் எனக்கு பிடிப்பதில்லை..இப்படி ஒரு கதை எழுதவா என்று ஓராயிரம் முறை யோசித்து, கடைசியில், நான்கு பேருக்கு நன்மை நடக்குதுன்னா எத எழுதினாலும் தப்பில்லை என்று தோன்றவே இதை துணிந்து எழுதினேன்.பொறுமையாக படியுங்கள். —– அதிகாலை பொழுது.. எல்லோரும் வாக்கிங் ஜாகிங் என்று உடம்பை பேணி பாதுகாத்துக்கொள்ள துவங்கியிருப்பதால், அடிக்கும் குளிரையும் பொருட்படுத்தாது நடப்பதும் ஓடுவதுமாய் இருந்தனர்.


சகுனம்

 

  இரவு வந்து சோம்பலை முறிக்கும் நேரம்..நிலாப்பெண் தன் முகத்தை மறைத்து, சூரியன் உதிக்கும் காலைப் பொழுது, பகலவன் ஒளி, பனி மூட்டத்தை விலக்கி கொண்டு மெது மெதுவாக புலர்ந்து கொண்டிருந்தது. பரபரப்பான சென்னை மாநகரத்தின் அடையாறு… அங்கே அடுக்கு மாடி குடியிறுப்புகளுக்கு மத்தியில், தனி வீடு ஒன்று பிரம்மாண்டமாய் இருந்தது..அதில் “ஏன்னா ,சித்த இங்க வாங்கோளேன்..நான் இங்க கரடியா கத்திண்டு இருக்கேன்..நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கேள்..எழுந்து வாங்கோ..இந்த பலகாரம் பண்டங்கள எல்லாம் சரியா அடுக்கி


இலவசம்

 

  “சாரூ..சாரு..எங்க போயிட்டம்மா நீ..இங்க வா..உன் வீட்டுக்காரன் ஏலம் விடாத குறையா கத்திக்கிட்டு இருக்கான்..போயி என்னன்னு கேளு “ என்றார் மரகதம். சாருவின் மாமியார் தான் இந்த மரகதம். அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட சாரூ, “ இதோ போறேன் அத்தை..உங்க பையனுக்கு வேற வேலை என்ன..அதை காணோம் இதை காணோம்னு சொல்ல போறார்.அவ்ளோதான்.அடுப்பிலே பால் வச்சிருக்கேன்.கொஞ்சம் பொங்கிடாம பாத்துகோங்க..இப்ப வந்தர்றேன்” என்றவள் தனது எட்டுமாத வயிறை தூக்கிகொண்டு கணவனை தேடி சென்றாள். அறை முழுவதும் குப்பையாக்கி வைத்திருந்தான் கேசவன்..