கதையாசிரியர் தொகுப்பு: நிலாவண்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சுனை வற்றாது

 

 செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவள் மனம் இனம் புரியாத பரபரப்பில் ஆழ்ந்து போனது. தொண்டைக் குழிக்குள் தமிழ் நாட்டு ‘கோலி சோடா’ போன்ற ஓர் உருண்டை உருளுவது போன்ற உணர்வு. போகலாமா… வேண்டாமா… அதற்கான பதிலை மனதின் ஆழத்தில் தேடித் தேடிப் பார்த்தாள். மாயமான் போல் வருவதும் மறைவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. அந்த தோட்டத்தில் நடந்த சாவோ வாழ்வோ எதற்குமே போகாமல் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி மறுத்து விட்ட போது இந்த இறப்பிற்கு மட்டும் போகக் கேட்டால்


தொடாமல் நின்றவன்

 

 அன்று தோட்டத்தில் வருடாந்திர ஆலயத்திருவிழா. காலை பூசைக்குப் பிறகு தீமூட்டப்பட்ட காண்டாகட்டைகள் பதமாக வெந்து தீக்குழி கனகவென்ற தணலுடன் தயார் நிலையில் இருந்தது. அதில் மேலும் அனல் கனியத் தென்னை மட்டை கொண்டு கிளறி விடப்பட்டது. தீக்குழிக்கு எதிரே உள்ளூர், வெளியூர் பக்தர்களும் பார்வையாளர்களும் பக்திப் பரவசத்துடனும் வேடிக்கை பார்க்கவும் குழுமியிருந்தார்கள். நேர்த்திக்கடனைத் தீக்குழி இறங்கி நிறைவேற்ற ஆண்களும் தீக்குழி வலம் வர பெண்களும் காத்திருந்தனர். தீ இறங்குபவர்களுக்கும் தீக்குழி சுற்றி வருபவர்களுக்கும் மஞ்சள் நீரைத் தலை