கதையாசிரியர் தொகுப்பு: நா.பார்த்தசாரதி

25 கதைகள் கிடைத்துள்ளன.

பிரதிபிம்பம்

 

 அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக அதற்குச் சம்மதித்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது அவளுக்கு தன் வயதென்ன, அனுபவம் என்ன, முதுமை என்ன? – யாரோ ஒரு முந்தாநாள் கத்துக்குட்டி நடிகையைத் தான் எதற்காகச் சந்தித்து அவளோடு சரிசமமாக எதிரும் புதிருமாய் உட்கார்ந்து பேசுவது என்று எண்ணிய போது முதலிலேயே சரி என்று சொல்லியிருக்க வேண்டாமோ என்று இப்போது பட்டது அவளுக்கு. ஒரு


பெரிய மாயன் பொட்டல்

 

 மங்கலக்குறிஞ்சி ஊரைச் சுற்றி அழகிய மலைத்தொடர்களும் பச்சைப்பசேரெனத் தோன்றிய வயல் வெளிகளும் சோலைகளும் பழத் தோட்டங்களும் நிறைய இருந்தன. ஆனால், இவற்றையெல்லாம்விட ஊருக்குக் கிழக்கேமலையடி வாரத்தில் வெட்ட வெளியாய்த் தோன்றிய அந்தச் சின்னஞ் சிறு பொட்டல்தான் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்தது. இதனால் என்னுடைய ரஸிகத்தன்மையைப் பற்றி நேயர்கள் சந்தேகிக்க வேண்டாம். இயற்கை அழகின் நடுவே திருஷ்டி கழித்தது போலச் சூனியமாய் நின்ற அந்தப் பொட்டலின் பெயரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்ட கதையும்தான் என் மனத்தைக் கவர்வதற்குக் காரணமாக


மூவரை வென்றான்

 

 மதுரையிலிருந்து தென்காகி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுப்பட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை தெற்கு வடக்காகச் செல்கிறது. சாலையின்மேல் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கைகாட்டி மரத்தில் ‘மூவரை வென்றான்-1 மைல் 4 பர்லாங்கு-’ என்று கறுப்புத் தார் பூசிய மரச்சட்டத்தில் வெள்ளை வார்னிஷால் பளிச்சென்று எழுதப்பட்டிருக்கும். நான் அடிக்கடி இந்தச் சாலை வழியே பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவன். ஏதோ ஒரு கிராமம் மேற்கே ஒன்றரை மைலில் இருப்பதாகவும், அந்தக் கிராமத்தின்


சிலந்தி சிரித்தது

 

 கட்டுரை எழுதுவதற்காகக் கற்பனைப் பறவையின் இறக்கைகளை அவிழ்த்துப் பறக்கவிட்டவாறு உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிதைந்த தன் வலையைச் சீர்ப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு சிலந்தி. அதன் செய்கை உலகம் ஒப்பும் ஒரு உண்மையை நினைவுறுத்தியது. அந்த உண்மை – “உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் வாழ விரும்புகிறது; எப்படியாவது எந்த வழியிலாவது தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறது”. இல்லாவிட்டால் இந்தச் சிலந்தி பட்டிழையைவிட மெல்லிய மின்னும் இழைகளைக் கொண்டு அழகாக மாயவலை பின்னி அதிலே பல


நினைவின் மறுபுறம்

 

 திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்தக் கூட்ட முடிவில் அங்கு எதிரே சந்தித்தவர்கள் அத்தனை பேரும் அலட்சியமாகப் பார்ப்பதற்குத் தான் ஒருத்தியே பாத்திரமாகி விட்டாற்போல் தோன்றியது அவளுக்கு. வாழ்க்கையின் பல்லாயிரம் நுணுக்கங்களை வாய் திறந்து பேசுவது போல் அமைதியாகக் கூர்ந்து நோக்கும் அவனுடைய கண்கள், சிரிப்பு உறங்கும் ஏளனமான பார்வை, வலக் கையைத் தாமரைப் பூப் போல மேலே உயர்த்தி ஆள் காட்டி விரலை ஆட்டி ஆட்டிப் பேசும் ஆணித்தரமான பேச்சு, ‘மைக்’கிற்கு முன் சிங்கம் போல் வந்து


காலத்துக்கு வணக்கம்

 

 அன்றைய காலைத் தபாலில் ஒரே ஒரு கடிதந்தான் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். விக்கிரமசிங்க புரத்திலிருந்து வீரராகவன் எழுதியிருந்தான். வழக்கமான குசலப்பிரச்னத்துக்கு அப்புறம் கீழ்க்கண்ட விவரம் அதில் எழுதப்பட்டிருந்தது. “வருகிற ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். நீங்களும் அம்மாவை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. கட்டாயம் நாலு நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வாருங்கள்” “இந்தா… உன்னைத்தானே?… தூக்கமா? உன் பிள்ளையாண்டான் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து கடுதாசி எழுதியிருக்கிறான்.” அடுக்களைக் காரியத்தை முடித்த அலுப்புடன் ரேழி


அலைபட்ட கடலுக்கு மேலே

 

 அந்தி கடற்கரையில் இருள் கவிந்துவிட்டது. எல்லையற்ற கருநீல நீர்ப்பரப்பின் மேல் தரங்கப் பாய்கள் சுருண்டு சுருண்டு கரையைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன. ரொட்டி, பட்டாணி விற்றுக் கொண்டிருந்த இரண்டொரு சிறுவர்களும் கடையைக் கட்டிக் கொண்டு போய்விட்டனர். பீச் ரோடிலிருந்து மெரீனா சாலையில் திரும்பும் கார்களின் விளக்கொளி இடையிடையே இருள் மூட்டத்தை ஊடுருவியது. கடற்கரை விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன. விளக்குக்கு அப்பால் தொலைவில் தள்ளி உட்கார்ந்திருந்தேன். கடல், அலை, ஓசை, இருள், நான் எல்லோரும் இருந்தோம். நிம்மதி,


தீமிதி

 

 பங்குனி மாதம். கோடை வெய்யில் கொளுத்து கொளுத்தென்று கொளுத்திக் கொண்டிருந்தது. அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. பங்குனி அமாவாசையன்று துரோபதை அம்மன் கோவில் தீமிதி உற்சவம். தலைமுறை தலைமுறையாகக் கிராமத்தில் நடந்துவரும் திருவிழா அது. ஊராருக்கு அந்தத் திருவிழாவில் பயபக்தி அதிகம். கோடை வெப்பத்தால் உயிர்களைச் சூறையாடும் அம்மை, கொப்புளிப்பான், வைசூரி போன்ற நோய்கள் ஊரில் பரவாமல் தடுக்கும் தெய்வீக முயற்சியாக இந்தத் திருவிழாவைக் கருதி வந்தனர். அந்த வருட உற்சவத்தை நடத்துவது பற்றி விவாதிப்பதற்காகக்


வேப்பம் பழம்

 

 கிழக்கு வானத்தில் பகல் பூத்துக் கொண்டிருந்த நேரம். மண்ணுலகத்து இன்பமெல்லாம் ஒன்று சேர்ந்து காற்றாய் வீசுவதுபோல் வேப்ப மரத்துக் காற்று வீசிக் கொண்டிருந் தது. காகம் கரையும் ஒலி, மேல வீட்டுப் பாகவதர் பூபாளம் பாடும் அழகு, பக்கத்து வீட்டு மாட்டுக் கொட் டத்தில் பால் கறக்கும் ஒலி, தெரு வாசலில் சாணம் தெளிக் கும் ஓசை, இடையிடையே வாசலில் கோலம் போடும் பெண் கரங்களின் வளைக்குலுங்கல், கோவில் விசுவரூப மணியோசை காற்றில் மிதந்து வரும் நாதம்….


பொய் சொல்லத் தெரியாமல்…

 

  அவனுக்கு ஒரு பாவமும் தெரியாது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல அந்த நிகழ்ச்சி நடந்திருந்தது. கல்லூரி முழுவதும் அவனை ஆதரித்து அவனுக்காகப் போராடக்கூடக் காத்திருந்தது. ஆனாலும் அந்த ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்று வசதியாக அவற்றில் குளிர்காய அவனுக்கு மட்டும் விருப்பமில்லை. அவனுக்கு – அதாவது, சுகுமாரன் என்கிற சுமனுக்குத் தன்னைத் தப்பச் செய்து கொள்ள வேண்டுமென்றோ, காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றோ கூட எண்ணமிருந்ததாகத் தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட இரண்டு சோதனைகளிலும் அவன் அப்படித்தான் நடந்து