Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: நாகரத்தினம் கிருஷ்ணா

13 கதைகள் கிடைத்துள்ளன.

மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

 

  மகாசன்னிதானம் இதற்கு முன்பும் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். விழுந்த வேகத்தில் எழுந்துமிருக்கிறார். இம் முறை மனமல்லவோ விழுந்திருக்கிறது. இனி கற்பதற்கு எதுவுமில்லையென இறுமாந்திருந்தபோது, மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை போதித்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலும் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, நுகத்தடியில் எருதுகளை வலம் இடம் அறிந்து பூட்டியவர் இப்போது சாட்டையைக் கையிலெடுக்கப் பயம். சாட்டையைக் கையிலெடுத்துப் பழகிய கைக்குச் சோர்வு ஒருபக்கமெனில் ஓங்கிய கையைத் தடுத்து ஓரிரு வார்த்தைகளை இவருக்கு எதிராக உதிர்த்தாலும் போதும், உடல் கூசிப்போகும். குருபீடத்திலிருத்து இவர்


செந்தமிழ் நகர்

 

  வருடம் 2025. மயானக்கொள்ளையும் இறந்த தலைவருக்குச் செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய எதிர்பார்ப்பில் நிச்சயத்தன்மைகளின் விழுக்காடு குறைவாகவே இருந்தது. பெரிய அதிர்ச்சிகள் எவையுமில்லையென்றாலும் ஒருவிதமான பதற்றமும் வியப்பும் சேர்ந்த கலவை நெஞ்சில் கொப்பளித்தது. மனத்தில் அதுநாள் வரை வளர்த்துக்கொண்ட கற்பனைக்கு வடிவம் கொடுத்திருப்பேனோ என்ற சந்தேகத்தில் மெல்ல நடந்து பெயர்ப் பலகையைத் தொட்டுப்பார்த்து அப்படியேதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான்கடிக்கு இரண்டடி அளவிலிருந்த பலகையில்


குடைராட்டினம்

 

  பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர் பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கோலாகலமும் அக்கட்டடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது. தடித்த கண்ணாடியின் கீழ்ப் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு, பச்சை, பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாகக் கையில் வாங்கிய வேகத்தில் மதுவைத் தொண்டைக்குழிக்கனுப்பிக் குளிரைச் சரீரத்திலிருந்து