கதையாசிரியர் தொகுப்பு: நர்சிம்

9 கதைகள் கிடைத்துள்ளன.

நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!

 

  ”டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?’ காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில் அடித்துக்கொண்டே போனான். ஒருவன் எவனிடமாவது மாட்டிக்கொண்டால், அடுத்தவனுக்கு இயற்கையிலேயே எழும் மகிழ்ச்சியை அந்த ட்ரிங்… ட்ரிங்… ட்ட்ட்ரிங்ங்… ட்ட்ட்ரிங்ங்… ட்ரிங்… ட்ரிங்… உணர்த்தியது. எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இத்தனைக்கும் டி.ஆரால் தேடப்படுபவன் நான் அல்ல. என் அருகில் அமர்ந்திருக்கும் ரகு. ‘எதுக்குடா டி.ஆர். என்னையத் தேடுறாப்லயாம்?’ – லேசாகச் செருமிக்கொண்டே கேட்டான் ரகு.


அந்தாதி

 

 அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி ஓட்டினேன். பொதுவாக யாரிடத்தும் அவ்வளவு ஈர்ப்போ ஈடுபாடோ ஏற்படாது எனக்கு. ஆனால் அவள் ஓட்டிச் சென்ற விதம் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் இந்த சேஸிங். நினைத்தது போலவே அந்த சிக்னலில் அவளுடைய கார் நின்றிருந்தது. கவனமாய் அருகில் சென்று அவளுடைய காருக்கு அருகில் சொருகினேன். புளூ டூத்தில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை பிறருக்கு புரியவைக்க


மது + மாது = காதல்

 

 மது, மாது ஆகியவற்றில் சிக்கக் கூடாது என்பார்கள். நான் காதலில் சொக்கிய மாதுவின் பெயரே மது. மதுமதி. தெளிந்த நீரோடைபோல் ஓடிக் கொண்டிருந்த என்னை இப்படிச் சுழற்றியடித்து, பஸ் ஸ்டாண்ட், அடையாறு எனத் திருப்பிவிட்டு அலையவிட்டது என் அம்மாதான். எல்லா நாட்களைப் போல்தான் அன்றும் விடிந்தது. ஆனால் முடியவில்லை. ஜாகிங்கிற்காக இத்தியாதிகளோடு எப்பொழுதும்போல் கிளம்பி கடற்கரையை அடைந்து மூச்சிரைக்காமல் நடந்து பின் வேகமெடுத்து, உடம்பை வேர்க்க வைத்தேன். தினமும் வரும் பேரிளம் ஆன்ட்டிகள் ரீபோக், அடிடாஸ்களுக்குள் கடினப்பட்டு


இன்னுமொரு காதல் கதை!

 

 ‘Maths and girls are the two most complicated things in the world… but… maths,atleast has some logic.’ சுரேஷ் அனுப்பிய செய்தியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். பெண்கள் என்றால் அவனுக்கும் அப்படித்தான் இருந்தது, சித்ராவைப் பார்க்கும் வரை. அதிகாலை காய்கறிக் கடையைப் பார்த்திருக்கிறீர்களா? செக்கச் சிவப்பாகத் தக்காளி, பச்சைப் பசேல் வெண்டைக்காய், கலர் கலராக கத்திரிக்காய், ரோஸூம் இளஞ்சிவப்பும் கலந்த கேரட், பச்சைப் பசேல் என கோஸ், தண்ணீர் தெளித்து அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும்.