கதையாசிரியர் தொகுப்பு: நந்தினி நாதன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

கூண்டு

 

  சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, கையைத் துண்டில் துடைத்துக்கொண்டே வந்து கதவு துவாரத்தின் வழியே வெளியே யார் நிற்பது என்று பார்த்தாள். மாடி வீட்டில் குடியிருப்பவளின் அம்மா குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். கதவைத் திறந்து “வாங்க, எப்படி இருக்கீங்க” என்றாள் சாந்தி. உள்ளே சிரித்துக் கொண்டே வந்த அந்த அம்மாளுக்கு 50 அல்லது 52 வயது இருக்கலாம். பாதி


மறைமுகம்

 

  அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52 வயதாகும் கேசவன் ஒரு தனியார் கம்பெனியில் நல்ல பதவியில் இருப்பவர். மனைவி பாக்யம் உள்ளே சமலறையில் அடுத்த வேளை உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். முன்நெற்றியில் முடி நரைத்து, வயதுக்கு அழகு சேர்க்கப் பார்க்க நன்றாகவே இருந்தாள். படித்துக்கொண்டே இருந்தவர் திடீரென்று “கலி முத்திடுச்சு பாக்யம், என்னவெல்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க பாத்தியா?” என்றார். இதைக்


காதல் என்பது எதுவரை?

 

  மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஏனே அம்மாவின் ஞாபகம் வந்தது. வெகு விரைவில் ஒரு முறை சென்று வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்து அலுவலகத்திற்குக் கிளம்பினான். மூர்த்தி 5′ 6” உயரம், மாநிறம், தெளிந்த முகம், பார்த்தவுடன் யாருக்கும் பிடித்துப் போகும் குணம் உடையவன். அலுவலகத்திற்குச் செல்லும் எண்ணமே


எதிர்பார்ப்புகள்

 

  நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். இரவு மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் கல்யாணம். வீட்டில் உற்வினர்கள் கூட்டமாய் கூடியிருந்தார்கள். ஆனால் நிவேதாவின் முகத்தில் சந்தோஷமே இல்லை. மாறாக மிகுந்த கவலையுடன் இருந்தாள். இந்தக் கல்யாணத்தில் அவளுக்குத் துளியும் இஷ்டமேயில்லை. அவள் அப்பா அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையைத்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் பார்க்க