கதையாசிரியர் தொகுப்பு: நந்தன் ஶ்ரீதரன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

செத்து செத்து விளையாடுபவன்

 

  கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தவர்களைத்தான் சோதிப்பான் என்று மணிகண்டனின் அப்பாயி அடிக்கடி சொல்லுவாள். அதனாலேயே அவன் ஒரு போதும் இறைவனின் பிடித்தவர்கள் லிஸ்ட்டில் இருக்க விரும்பியதில்லை. குறைந்தபட்சம் பிடித்தவர்களின் லிஸ்ட்டில் தான் இல்லாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தபடி இருப்பான். வெள்ளிக்கிழமை கறி தின்னுவது, அந்த தெரு கோவிலில் தினமும் கொடுக்கிற சுண்டலை இரவு சரக்குக்கு சைடு டிஷ்ஷாக பயன்படுத்துவது என்று எதையாவது செய்தபடி இருப்பான். வீட்டில் இருந்தாலாவது அம்மா இவை


ஒரு முகம், ஒரு பெயர் மற்றும் செல்வி என்றொரு சிநேகிதி..

 

  வெய்யில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த பாழாய்ப்போன புழுக்கம்தான் இது சென்னை என்பதை நினைவுபடுத்திகொண்டே இருக்கிறது.. எதிரில் இருந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்தான். விற்பனைக்கு என்பது மாதிரியான போர்டு எதுவும் இல்லை. சொல்லப் போனால் அந்தத் தெருவிலேயே for sale போர்டுபோட்ட அபார்ட்மெண்டுகள் எதுவும் இல்லை. ஆனால் புரோக்கர் இந்த தெருவுக்குதான் வரச்சொல்லியிருந்தான். அழகான தெருவாகத்தான் இருக்கிறது. முக்கு திரும்பும்போது எதிர்த்தாற்போல ஒரு சர்ச் இருக்கிறது. அதிசயமாக தெருவுக்குள் ஒரு முதியோர் இல்லம் தென்பட்டது. தெருவில்


செல்லக்கிளியின் தம்பி

 

  எறும்புகளின் வாழ்விடங்கள் யானைகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. யானைக்கு கால்தடம் என்று அறியப்படுவது எறும்புகளுக்கு பேரழிவாக இருக்கக் கூடும்.. தாம் நடந்தது எறும்புகளின் குடியிருப்பு என்பதைக் கூட அறியாமல் யானைகள் பாட்டுக்கு நடந்தபடிதான் இருக்கின்றன. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் அந்த சாலையின் விசாலம்தான் என் கண்ணில் பட்டது. நான்கு வழிச் சாலை ஊருக்குள் வரப் போகிறது.. வருகிறது.. வந்து விட்டது.. என்பன மாதிரியான தகவல்கள் சென்னையில் இருந்த எனக்கு அவ்வப்போது வந்தபடிதான் இருந்தன. அச்சாலையினால் வீடுகளை இழந்து, போராடியும்