கதையாசிரியர் தொகுப்பு: த.நரேஸ் நியூட்டன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவுகள் தவறானால்….

 

 நேரம் காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. காலை வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடித்து தனது இரண்டாவது பணியாகிய மதிய உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள் சரசு. இன்றைக்கு மதியம் கத்தரிக்காய் பிரட்டலும் பருப்பும் அப்பளப் பொரியலும் செய்தால் போதும் என்று மனதில் ஒரு திட்டத்தைப் போட்டுக்கொண்டு பொதியில் இருந்த சிவப்பு புளுங்கல் அரிசியில் மூன்று சுண்டு அரிசியை அரிக்கன் சட்டியில் போட்டு நீர் விட்டு கல் அரித்து அப்படியே நன்றாக கழுவி முற்கூட்டியே கழுவி வைத்திருந்த பானையில்


லச்சுமியின் கனவு கனிந்தது

 

 சூரியனின் கதிர்கள் மெதுவாக அந்த தகரக் கொட்டகை மீது இருந்த சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுளைந்து ஆங்காங்கே நிலத்தில் பட்டு தெறிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே சூழ்ந்திருந்த இருள் மெதுவாக அகன்று வெளிச்சம் வர ஆரம்பித்தது. நாள்தோறும் இந்த மெல்லிய வெளிச்சம்தான் அவளை துயிலெழுப்பி விடும். இன்றும் அதேபோலவே ஓரிரு கதிர்கள் அவளது உடலை வருடவே சடுதியாக கண்விழித்து எழுந்தாள். ஐயய்யோ…. கனக்கா நேரம் அயந்து தூங்கிட்டனோ…. தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக எழுந்தாள் லச்சுமி. லச்சுமி


சிவராசுவின் தீர்ப்பு

 

 நேரகாலத்தோடு அமர்வுக்கு வந்ததால் அங்கு பரவலாக போடப்பட்டிருந்த அந்த நீளமான வாங்குகளில் ஒன்றில் இடம் கிடைக்க அதில் அமர்ந்துவிட்டார் சிவராசு. வந்து சேர்ந்த களைப்பு நீங்க சற்று நீண்ட மூச்சை உள்வாங்கி வெளியேற்றி தன்னை ஒரு கணம் சுதாகரித்த வண்ணம் சுற்றும் முற்றும் தனது நோட்டமிடலை ஆரம்பிக்கிறார். அமைதியான சூழலுக்குள் ஆங்காங்கே ஒரு சில குரல்கள் அடங்கலான சப்தத்தில் மென்மையான இரைச்சல் அங்கு பரவியருந்ததை உணரக்கூடியதாக இருந்தது. அங்கு அவரைச்சூழ நூற்றுக்கும் அதிகமான மக்கள். வெவ்வேறு மதம்